search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யாருடைய பெட்ரோலியத்தையும் பறிமுதல் செய்ய ஈராக்கில் முகாமிடவில்லை: அமெரிக்கா
    X

    யாருடைய பெட்ரோலியத்தையும் பறிமுதல் செய்ய ஈராக்கில் முகாமிடவில்லை: அமெரிக்கா

    ஈராக் நாட்டில் யாருடைய பெட்ரோலிய வளத்தையும் பறிமுதல் செய்வதற்காக தங்கள் நாட்டு படைகளை அனுப்பவில்லை என்று அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
    பாக்தாத்:

    ஈராக் மற்றும் சிரியாவில் 2014-ம் ஆண்டு பல பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி இஸ்லாமிய தேசம் என்ற நாட்டை தன்னிச்சையாக உருவாக்கினார்கள்.

    ஈராக் நாட்டின் 2-வது பெரிய நகரமான மொசூல் நகரத்தை ஐ.எஸ். அமைப்பினரின் பிடியில் இருந்து மீட்பதற்காக, அந்த நாட்டின் படைகள் சண்டையிட்டு வருகின்றன. இந்த சண்டையினால் அந்த நகரத்தை சேர்ந்த சுமார் 47 ஆயிரம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

    இதில் ஈராக் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படைகள் கூட்டு சேர்ந்த ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், ஈராக் நாட்டில் உள்ள பெட்ரோலிய வளத்தை பறிமுதல் செய்வதற்காக தங்கள் நாட்டு படைகளை அனுப்பவில்லை என்று அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் ஜிம் மட்டீஸ் தெரிவித்துள்ளார்.

    பாக்தாத் நகருக்கு வருகை புரிந்த அவர், ”இங்கு நாங்கள் பெற்றுக் கொள்ளும் கேஸ் மற்றும் எண்ணெய் பொருட்களுக்கு உரிய தொகையை செலுத்தி வருகிறோம். வருங்காலத்திலும் அவ்வாறே செய்வோம்” என்றார்.
    Next Story
    ×