search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனிதர்கள் வேலைகளை பறிக்கும் ‘ரோபோ’க்கள் வரிகள் செலுத்த வேண்டும்: பில்கேட்ஸ்
    X

    மனிதர்கள் வேலைகளை பறிக்கும் ‘ரோபோ’க்கள் வரிகள் செலுத்த வேண்டும்: பில்கேட்ஸ்

    ‘மனிதர்களின் வேலைகளை திருடும் ‘ரோபோ’க்கள் வரி செலுத்த வேண்டும்’ என பில்கேட்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
    நியூயார்க்:

    ‘ரோபோ’ எனப்படும் எந்திர மனிதன் தற்போது அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் மனிதர்கள் செய்யும் வேலைகள் ‘ரோபோ’க்களால் திருடப்படுகிறது.

    மனிதர்களை வைத்து வேலை வாங்கும் போது அவர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அதை தவிர்க்கவே நிறுவன உரிமையாளர்கள் ‘ரோபோ’க்களை பயன்படுத்துகின்றன. இதனால் மனிதர்களின் பணிகள் பறிக்கப்படுகின்றன.

    எனவே, பணியில் அமர்த்தப்படும் ‘ரோபோ’க்களுக்கு வரிகள் வசூலிக்கப்பட வேண்டும் என மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டர் நிறுவன அதிபரும், உலகிலேயே நம்பர் ஒன் பணக்காரருமான பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

    “தொழிற்சாலைகளில் ஒரு மனிதன் 50 ஆயிரம் டாலருக்கு பணிபுரியும் போது வருமான வரி, சமூக பாதுகாப்பு வரி உள்ளிட்ட பலவகையான வரிகள் விதிக்கப்படுகின்றன. அதே போன்று தொழிற்சாலைகளில் பணியில் ஈடுபடுத்தப்படும் ‘ரோபோ’க்களுக்கும் வரிகள் விதிக்கப்பட்டு அவை வசூலிக்கப்பட வேண்டும்.

    ‘ரோபோ’க்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வரிப்பணத்தை முதியோர் நலன் பாதுகாப்பு அல்லது பள்ளிகளில் குழந்தைகளுடன் பணிபுரியும் மகளிர் நலன் திட்டங்களுக்கு பயன்படுத்தலாம்” என்று தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×