search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈராக் ராணுவ தாக்குதல் எதிரொலி: ஐ.எஸ் வசம் இருந்த 10 கிராமங்கள் மீட்பு
    X

    ஈராக் ராணுவ தாக்குதல் எதிரொலி: ஐ.எஸ் வசம் இருந்த 10 கிராமங்கள் மீட்பு

    மேற்கு மொசூல் பகுதியில் ஈராக் ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதல் மூலம் ஐ.எஸ் தீவிரவாதிகள் வசம் இருந்த சுமார் 10 கிராமங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    பாக்தாத்:

    ஈராக் ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதல் மூலம் ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த 10 கிராமங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு மோசுல் பகுதியை மீட்க நடத்தப்பட்ட இந்த தாக்குதல் பொது மக்களுக்கு பெரும் ஆபத்தான சூழல் ஏற்பட்டது.

    பல்வேறு திசைகளில் முன்னேரிய ராணுவ படையினர் நகரின் தென் பகுதியில் இருக்கும் மொசூல் விமான நிலையம் நோக்கி தாக்குதல் நடத்தினர். கடந்த சில ஆண்டுகளில் ஈராக் ராணுவத்தின் மிகப்பெரிய ராணுவ நடவடிக்கையாக இது அமைந்ததோடு புதிய வளர்ச்சியடைந்துள்ளது.

    ஐ.எஸ் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதி ஈராக் மற்றும் சிரியாவில் பிரகடனம் செய்த மொசூல் நகரை தற்காத்து கொள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் சார்பில் கடுமையான எதிர்ப்பு இருந்த போதும் அவர்களின் முயற்சி பலன் அளிக்காமல் போனது.

    தீவிரவாதிகளிடம் இருந்து மக்களுக்கு விடுதலை அளிக்க நமது படையினர் அதிரடி பணிகளை துவங்கியுள்ளனர் என பிரதமர் ஹைதர் அல்-அபாதி தெரிவித்துள்ளார். 

    மூத்த ராணுவ அதிகாரி கூறும் போது மத்திய போலீஸ் படைகள் மொசூல் நகர கிராமங்களை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அடாபா முதல் விமான நிலையம் வரையிலான பகுதிகள் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×