search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    76 தீவிரவாதிகளை உடனே ஒப்படையுங்கள்: ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தான் வலியுறுத்தல்
    X

    76 தீவிரவாதிகளை உடனே ஒப்படையுங்கள்: ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தான் வலியுறுத்தல்

    எல்லையில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகள் 76 பேரை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தான் வலியுறுத்தி உள்ளது.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடந்த சில தினங்களாக தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ள சூபி வழிபாட்டுத் தலத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் சமீபத்தில் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 76 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து தீவிரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    பாதுகாப்பு காரணங்களுக்காக ஆப்கானிஸ்தான் எல்லையை பாகிஸ்தான் மூடிவிட்டது. எல்லைப்பகுதியில் மறைந்திருக்கும் தீவிரவாதிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் நடவடிக்கை எடுப்பதற்கு அழுத்தம் அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தேடப்படும் தீவிரவாதிகள் 76 பேர் ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருப்பதாக கூறிய பாகிஸ்தான், அந்த தீவிரவாதிகளின் பட்டியலை இன்று ஒப்படைத்துள்ளது.

    இதுபற்றி பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஆசிப் கபூர் கூறுகையில், “ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமை அலுவலகத்திற்கு ஆப்கானிஸ்தான் தூதரக அதிகாரிகளை வரவழைத்து, ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருக்கும் 76 தீவிரவாதிகள் பட்டியலை அளித்துள்ளோம். மேலும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது பாகிஸ்தானிடம் ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டோம்” என்றார்.

    ஆப்கானிஸ்தானிடம் ஒப்படைத்த பட்டியலில் உள்ள தீவிரவாதிகளின் பெயர்களை ராணுவம் வெளியிடவில்லை.
    Next Story
    ×