search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வட கொரியா அதிபரின் சகோதரர் படுகொலை - மேலும் ஒரு பெண் கைது
    X

    வட கொரியா அதிபரின் சகோதரர் படுகொலை - மேலும் ஒரு பெண் கைது

    வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்-னின் சகோதரர் மலேசியாவில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே வியட்நாமைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
    கோலாலம்பூர்:

    உலக நாடுகளின் தடை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கண்டனத்துக்கு உள்ளாகி வரும் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன், அணு ஆயுதங்களையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் நவீனரக ஏவுகணைகளையும் அவ்வப்போது தொடர்ந்து பரிசோதித்து வருகிறார்.

    இந்நிலையில், கிம் ஜாங் உன்-னின் ஒன்றுவிட்ட சகோதரரான (தந்தையின் சகோதரர் மகன்) கிம் ஜாங் நாம் மலேசியாவில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மலேசிய போலீசார், வியட்நாம் நாட்டு பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஒரு பெண்ணை கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் முதல்கட்ட தகவல் வெளியானது.

    இந்த கொலையில் தொடர்புடைய மேலும் மூன்று பேரை போலீசார் தேடி வருவதாகவும், வெளிநாட்டை சேர்ந்த ஒரு கும்பலின் சதி திட்டப்படி, இரண்டு பெண்கள் கிம் ஜாங் நாம்-ஐ கொன்றதாக சந்தேகிக்கப்படுவதாகவும் மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன.

    இந்நிலையில், போலீசாரின் சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தும் வகையில், கிம் ஜாங் நாம் கொலை தொடர்பாக மேலும் ஒரு பெண்ணை மலேசிய போலீசார் இன்று கைது செய்துள்ளனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள பெண் பற்றிய விபரங்களை போலீசார் வெளியிடவில்லை.
    Next Story
    ×