search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதாளச் சாக்கடையில் 22 ஆண்டுகளாக வசிக்கும் தம்பதி
    X

    பாதாளச் சாக்கடையில் 22 ஆண்டுகளாக வசிக்கும் தம்பதி

    கொலாம்பியா நாட்டில் மின்சாரம், டி.வி வசதியுடன் 22 ஆண்டுகளாக பாதாளச் சாக்கடையில் வசித்து வரும் தம்பதி குறித்த செய்தி வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது
    பொகோட்டா:

    கொலம்பியா நாட்டில் மெடிலின் என்ற பகுதியைச் சேர்ந்த தம்பதிகளான மரியா கார்சியா மற்றும் மிகுல் ரெஸ்ட்ரீபோ ஆகிய இருவரும்தான் இந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர்கள் ஆவர். கடந்த 22 வருடங்களுக்கு முன்னர் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருவரும் சாலையில் சுற்றித் திரிந்து வந்துள்ளனர். 

    பிளாட்பாரங்களில் தங்கியிருக்கும் போது ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்து வந்ததால், போதைப் பழக்கத்தையும்  விட்டொழிக்க இருவரும் முடிவு செய்தனர். பின்னர், சேர்ந்து வாழ முடிவெடுத்த இருவரும் பயனில்லாத பாதாளச் சாக்கடையை தேர்ந்தெடுத்து தங்களுக்கான இல்லத்தை யாருடைய உதவியுமின்றி இருவரும் உருவாக்கியுள்ளனர். 22 வருடங்களாக இருவரும் மகிழ்ச்சியாக தங்களது இல்லத்தில் வசித்தும் வருகின்றனர்.

    தங்களுக்கு துணையாக ஒரு நாயையும் வளர்த்துவரும் இவர்கள், தங்கள் பாதாளச் சாக்கடை இல்லத்தில் மின்சார வசதியைப் பெற்று, டி.வி உள்ளிட்ட சாதனங்களையும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், பண்டிகைக் காலங்களில் தங்கள் இல்லத்தை அலங்காரம் செய்து மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.


    22 வருடங்களாக பாதாளச் சாக்கடையில் வசித்து வரும் இந்த தம்பதிகள் பற்றிய தகவல்கள், செய்தியாக வெளியாகி உலகமெங்கும் உள்ள மக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×