search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை வருத்தமளிக்கிறது: கூகுளின் சுந்தர் பிச்சை வேதனை
    X

    டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை வருத்தமளிக்கிறது: கூகுளின் சுந்தர் பிச்சை வேதனை

    அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டுள்ள புதிய அறிக்கை தன்னை வேதனையில் ஆழ்த்தியிருப்பதாக கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
    சான்பிரான்சிஸ்கோ:  

    ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய புதிய கட்டுப்பாடுகள் விதிக்கும் தீர்மானம் குறித்து கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை விமர்சித்துள்ளார். டொனால்ட் டிரம்ப்பின் புதிய தீர்மானம் 187 கூகுள் தொழிலாளர்களை பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    'இந்த தீர்மானம் எங்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இது கூகுள் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கும் கட்டுப்பாடுகளை விதிக்கிறது. மேலும் அமெரிக்காவிற்கு திறமைகளை கொண்டு வருவதிலும் இது கட்டுப்பாடுகளை ஏற்படுத்துகிறது', என சுந்தர் பிச்சை தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார்.

    வெள்ளிக் கிழமையன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கையொப்பமிட்ட உத்தரவில் கிட்டத்தட்ட 90 நாட்களுக்கு ஈராக், ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் ஏமனில் இருந்து அமெரிக்கா வருபவர்களுக்கு விசா வழங்குவது 30 நாட்களுக்கு தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டிரம்ப் கையெழுத்திட்ட இந்த உத்தரவு, இஸ்லாமிய தீவிரவாதிகள் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கவும், தங்கி இருக்கும் தீவிரவாதிகளை வெளியேற்றவும் அதிகாரம் அளிக்கும் வகையில் உள்ளது.  

    முன்னதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் தானும் இந்த அறிக்கையின் மூலம் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். 'இந்த நாட்டை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும், ஆனால் இதற்கு யார் பிரச்சனையை ஏற்படுத்துகின்றார்களோ அவர்களை மட்டும் குறி வைக்க வேண்டும்', என மார்க் தனது ஃபேஸ்புக் போஸ்ட்டில் பதிவு செய்திருந்தார்.
    Next Story
    ×