search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை - மேற்கு வங்காள கோர்ட்டு தீர்ப்பு
    X

    3 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை - மேற்கு வங்காள கோர்ட்டு தீர்ப்பு

    தேச விரோத செயல்களில் ஈடுபட்டதற்காக பாகிஸ்தானை சேர்ந்த இருவர் உள்பட 3 தீவிரவாதிகளுக்கு மேற்கு வங்காள கோர்ட்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
    கொல்கத்தா:

    தேச விரோத செயல்களில் ஈடுபட்டதற்காக பாகிஸ்தானை சேர்ந்த இருவர் உள்பட 3 தீவிரவாதிகளுக்கு மேற்கு வங்காள கோர்ட்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

    பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த 4 தீவிரவாதிகள் கடந்த 2007-ம் ஆண்டு ஏப்ரல் 4-ந் தேதி வங்காளதேசத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்றனர். இதை அறிந்து கொண்ட எல்லை பாதுகாப்பு படையினர், அவர்களை பிட்ராபோல் பகுதியில் அதிரடியாக கைது செய்தனர். இதில் ஒருவரான மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஷேக் சமீர் என்ற தீவிரவாதி, மும்பையில் கடந்த 2006-ம் ஆண்டு நடந்த ரெயில் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. அவருடன், இந்தியாவில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தானை சேர்ந்த ஷேக் அப்துல்லா, முகமது யூனிஸ் மற்றும் காஷ்மீரை சேர்ந்த முசாபர் அகமது கான் ஆகிய 3 தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டனர்.

    இவர்கள் 4 பேர் மீதும் தேசவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் மேற்கு வங்காளத்தின் 24 பர்கானாக்கள் மாவட்ட கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இதற்கிடையே ரெயில் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணைக்காக தீவிரவாதி ஷேக் சமீரை மும்பை கொண்டு செல்லும்போது கடந்த 2013-ம் ஆண்டு தப்பி ஓடினார். இதைத்தொடர்ந்து மற்ற 3 பேர் மீதான வழக்கில் 10 ஆண்டுகளுக்குப்பின் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் தீவிரவாதிகள் 3 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி பிஜோய் குமார் பதக் தீர்ப்பு அளித்தார். 
    Next Story
    ×