search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நைஜீரியாவில் கவனக்குறைவான விமான தாக்குதல்: பொதுமக்கள் 90 பேர் உயிரிழப்பு
    X

    நைஜீரியாவில் கவனக்குறைவான விமான தாக்குதல்: பொதுமக்கள் 90 பேர் உயிரிழப்பு

    நைஜீரியாவில் விமானப்படையினர் கவனக்குறைவாக நடத்திய வான் தாக்குதல் காரணமாக 90 பேர் உயிரிழந்துள்ளனர்.
    ஜெனீவா:

    நைஜீரியாவில் வடகிழக்குப் பகுதியில் தனி நாடு அமைக்க போகோஹராம் தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக கொடூரமான ஆயுத தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளனனர். மேலும், ஏராளமான பொதுமக்களையும் கொன்று குவித்துவருகின்றனர். எல்லையோர கிராமங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

    மாணவ, மாணவிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கடத்திச் செல்லும் தீவிரவாதிகள், தப்பிக்க முயன்றவர்களை சுட்டுக்கொல்கின்றனர். தீவிரவாதிகள், அரசுப் படையினர் மோதல் காரணமாக, பல லட்சம் மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.

    இந்நிலையில், ரான் நகரில் உள்ள முகாம் மீது அரசு விமானப்படை சமீபத்தில் கவனக்குறைவாக நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்கைள் உள்ளிட்ட சுமார் 90 பேர் கொல்லப்பட்டதாக எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு கூறியுள்ளது. நடந்த தவறை ராணுவ கமாண்டர்களும் ஒப்புக்கொண்டு, இதுபற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.

    அதாவது, ரான் நகரின் ஒரு பகுதியான காலா-பல்கே பகுதியில் உள்ள தீவிரவாதிகளை தாக்குவதற்கு பதிலாக இந்த முகாம் அருகில் குண்டுகளை வீசிவிட்டதாக கமாண்டர்கள் கூறுகின்றனர்.
    Next Story
    ×