search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    239 பேருடன் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி நிறுத்தம்
    X

    239 பேருடன் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி நிறுத்தம்

    கடந்த 2014-ம் ஆண்டு மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச். 370-ஐ தேடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    ஹாங்காங்:

    மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி, 227 பயணிகள், 12 சிப்பந்திகளுடன் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச். 370, கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ந் தேதி புறப்பட்டு சென்றது. ஆனால் 2 மணி நேரத்தில் அந்த விமானம், ரேடாரில் இருந்து மாயமானது.

    கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் பெய்ஜிங் சென்றபோது மாயமான மலேசியா விமானம் எங்கேதான் போனது, என்னதான் ஆனது என்பது தெரியவில்லை. விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது என்று தெரிவிக்கப்பட்டது. விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டனர் என்றும் கூறப்பட்டது.

    அந்த விமானத்தை தேடி கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் கூட்டாக முயற்சிகள் மேற்கொண்டன. நவீன தொழில்நுட்பங்கள் பின்பற்றப்பட்டன. ஆனால் எந்தப் பலனும் இல்லை.  

    இந்நிலையில், நீருக்கடியில் விமானத்தை தேடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்த சீனா, ஆஸ்திரேலியா மற்றும் மலேசிய நாடுகளை சேர்ந்த அதிகாரிகள் இதனை கூட்டறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்.

    இதனிடையே தேடுதல் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதற்கு அதிருப்தி தெரிவித்த பயணிகளின் உறவினர்கள் ‘இது ஒரு பொறுப்பற்ற செயல்’ என்று கூறியுள்ளனர்.
    Next Story
    ×