search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மூட்டை, முடிச்சை கட்டிக்கிட்டு புறப்படுற வழியைப் பாருங்க: ஒபாமாவுக்கு வடகொரியா அட்வைஸ்
    X

    மூட்டை, முடிச்சை கட்டிக்கிட்டு புறப்படுற வழியைப் பாருங்க: ஒபாமாவுக்கு வடகொரியா அட்வைஸ்

    மனித உரிமை தொடர்பாக பேசி பொழுதை கழிக்காமல் மூட்டை முடிச்சை ‘பேக்’ செய்துகொண்டு வெள்ளை மாளிகையை விட்டு புறப்படுமாறு அமெரிக்க அதிபர் ஒபாமாவை வடகொரியா கேட்டுக் கொண்டுள்ளது.
    பியாங்யாங்:

    உலக நாடுகளின் தடையை மீறி அணு ஆயுதங்களையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் தயாரித்தும், பரிசோதித்தும் வரும் வடகொரியா மீது பொருளாதாரம், ஏற்றுமதி - இறக்குமதி, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு தடைகளை விதித்துள்ளது.

    மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக வடகொரியா அதிபர் கிம் ஜான் உன்-னின் சகோதரி யோ ஜாங் உள்பட 7 தனிநபர்கள் மீது அமெரிக்க நிதி அமைச்சகம் கடந்த வாரம் பொருளாதார தடை விதித்தது. உலகிலேயே மிக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதற்காக இந்த தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதற்கு பதில் அளிக்கும் வகையில் வடகொரியா அரசால் நடத்தப்படும் பிரபல செய்தி நிறுவனம் அமெரிக்க அதிபரை கேலி செய்யும் விதமாக ஒரு கருத்தை இன்று பதிவு செய்துள்ளது.

    ‘மற்றவர்களின் மனித உரிமை தொடர்பாக பேசி பொழுதை கழிக்காமல் மூட்டை முடிச்சை ‘பேக்’ செய்துகொண்டு வெள்ளை மாளிகையை விட்டு புறப்படும் வேலையில் கவனம் செலுத்துமாறு அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு யாராவது அறிவுரை கூற வேண்டும்.

    தனது ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவில் மிக மோசமான மனித உரிமை மீறல்களை உருவாக்கிய ஒபாமா, ஏராளமான அமெரிக்கர்களுக்கும் உலகில் உள்ள பிற மக்களுக்கும் ஏற்படுத்திய வலிக்காகவும், துரதிர்ஷ்டத்துக்காகவும் வருத்தப்பட வேண்டும்’ என அந்த செய்தி நிறுவனம் வெளியிட்ட ஒரு கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கவுள்ள வரும் 20-ம் தேதிக்குள் வெள்ளை மாளிகையை விட்டு ஒபாமா வெளியே செல்ல வேண்டும் என்ற நிலையில் வடகொரியா தெரிவித்துள்ள இந்த கருத்து பெரும் சர்ச்சையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×