search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏமன் உள்நாட்டு போரில் 10 ஆயிரம் பேர் பலி: ஐ.நா. தகவல்
    X

    ஏமன் உள்நாட்டு போரில் 10 ஆயிரம் பேர் பலி: ஐ.நா. தகவல்

    ஏமன் உள்நாட்டு போரில் 10 ஆயிரம் பேர் பலியானதாக ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.
    ஏடன்:

    ஏமனில் அரசுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது.

    தலைநகர் கனா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளையும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி தனி அரசு நடத்தி வருகின்றனர். எனவே அதிபர் மன்சூர் ஹாதி ஏடனை தலைநகராக கொண்டு ஆட்சி நடத்தி வருகிறார். இவருக்கு சவுதி ஆதரவு கூட்டுப்படைகள் ஆதரவு அளித்துள்ளன.

    இதனால் கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி கூட்டுப்படை ஆதரவு பெற்ற ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடக்கிறது. 21 மாதங்களாக நடைபெறும் உள்நாட்டு போரில் இதுவரை 10 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.

    40 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த தகவலை ஐ.நா.சபை தெரிவித்துள்ளது. உள்நாட்டு போர் தீவிரம் அடைந்துள்ளதால் லட்சக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு பற்றாக்குறை நிலவுகிறது. சுமார் 70 லட்சம் பேர் அடுத்தவேளை உணவு கிடைக்காமல் தவிக்கின்றனர்.
    Next Story
    ×