search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீவிரவாதிகளின் புகழிடமா?: ஆப்கான் குற்றச்சாட்டுக்கு பாக். மறுப்பு
    X

    தீவிரவாதிகளின் புகழிடமா?: ஆப்கான் குற்றச்சாட்டுக்கு பாக். மறுப்பு

    தீவிரவாதிகளின் புகழிடமாக திகழ்கிறது என்ற ஆப்கானிஸ்தானின் குற்றச்சாட்டு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது.
    கராச்சி:

    ஆப்கானிஸ்தானை ஒட்டிய பாகிஸ்தான் பகுதிகளில் தலிபான், அல்- கொய்தா, லஷ்கர்-இ-தொய்பா, தெஹ்ரிக்-இ-தலிபான் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத குழுக்கள் செயல்படுகின்றன. இந்திய துணைக்கண்ட அல்-கொய்தா பிரிவும் பாகிஸ்தானை மையமாக கொண்டே செயல்படுகிறது.

    இதனால் தெற்காசிய பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானில் இருந்து எல்லைத் தாண்டிவரும் தீவிரவாதிகளே தாக்குதலை நடத்தி வருகின்றனர் என்று குற்றம் சாட்டுகிறது.

    இதனிடையே, பாகிஸ்தான் தீவிரவாதிகளின் புகழிடமாக திகழ்கிறது என்று ஆப்கானிஸ்தான் சில மாதங்களுக்கு முன்பு குற்றம்சாட்டி இருந்தது.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தனின் குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் தற்போது மறுத்து தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் நபீஸ் ஜகிரா  வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆப்கானிஸ்தான் அமெரிக்காவின் துணை கொண்டு செயல்படுவதாக தெரிவித்து இருந்தார்.

    மேலும், பாகிஸ்தான் மண்ணில் தீவிரவாதிகள் பயன்படுத்திக் கொள்ள இடம் அளிக்க முடியாது என்று மீண்டும் வலியுத்தினார். 
    Next Story
    ×