search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாவிலைக்கு வந்த மகத்தான வாழ்வு: 25 இலைகளின் விலை ரூ.5509 - தவணை வசதியும் உண்டுடுடு
    X

    மாவிலைக்கு வந்த மகத்தான வாழ்வு: 25 இலைகளின் விலை ரூ.5509 - தவணை வசதியும் உண்டுடுடு

    தைத்திருநாளாம் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்காக மாவிலை தோரண வியாபாரத்தில் களமிறங்கியுள்ள பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனம் 25 மாவிலைகளுக்கான விலையை ரூ.5509 ஆக நிர்ணயித்துள்ளது.
    நியூயார்க்:

    தமிழர்களின் தலைமை திருநாளாம் பொங்கல் விழா என்றாலே வீடுகளின் வாசலில் பூசணிப்பூவுடன் கூடிய மாக்கோலமும் வாயிற்பாடியில் மாவிலை தோரணமும் இன்றியமையாத அம்சமாக இருக்கும்.

    உலகின் பல பகுதிகளில் வாழும் தமிழர்களும் தைப்பொங்கலை வெகு விமரிசையாக கொண்டாடிவரும் நிலையில் அம்மக்களின் பாரம்பரியம் சார்ந்த தேவையான மாவிலையை ஆன்லைனில் விற்பனை செய்ய பிரபல ஆன்லைன் வர்த்தக ஜாம்பவானான ‘அமேசான்’ வலை விரித்துள்ளது.

    இன்றைய சிறப்பு விற்பனை என்ற தொகுதியில் 25 மாவிலைகளின் விலை ரூ.5509 என அந்நிறுவனம் விளம்பரப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் தெற்கு புளோரிடா மாநிலத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் வளர்க்கப்படும் மாமரங்களில் இருந்து பறிக்கப்பட்ட இலைகள், பறிக்கப்பட்ட அன்றே மரப்பட்டையால் செய்யப்பட்ட சிறப்பு பெட்டிகள் மூலம் பாதுகாப்பாக டெலிவரி செய்யப்படும் என அறிவித்துள்ள இந்த நிறுவனம் மேற்கண்ட 25 மாவிலைகளை வாங்குபவர்களுக்கு தவணை முறை (இ.எம்.ஐ.) வசதியும் உண்டு என குறிப்பிட்டுள்ளது.

    மருத்துவ குணம் வாய்ந்த இலைகள் என்ற பின்னணியில் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தாலும் தைத்திருநாளாம் பொங்கலை முன்னிட்டு தோரணத்துக்காக மாவிலை தேடும் வெளிநாடுவாழ் தமிழர்களை குறிவைத்தே இந்த அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளதாகவும் பொருள்கொள்ள தோன்றுகிறது, அல்லவா?

    இதை ஆமோதிக்கும் வகையில் இந்த விளம்பரம் வெளியாகியுள்ள அமேசான் வலைத்தளத்தில் பலரும் பலவிதமாக கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.



    இது வேறு எங்கேயும் கிடைக்காது, இப்போதே ஆர்டர் செய்கிறேன் என ஒருவரும், ஐயாயிரம் ரூபாய் கொடுத்து மாவிலை வாங்கும் அளவுக்கு தமிழர்களை முட்டாள்கள் என்று நினைத்து கொண்டார்களா? என இன்னொருவரும், பகல் கொள்ளை, எங்க ஊருக்கு வாங்கடா இலவசமா பறிச்சித் தர்றேன் என வேறு சிலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
    Next Story
    ×