search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரகசிய தகவல்களை வைத்து டிரம்பை மிரட்டும் ரஷியா: அமெரிக்க பத்திரிகைகள் தகவல்
    X

    ரகசிய தகவல்களை வைத்து டிரம்பை மிரட்டும் ரஷியா: அமெரிக்க பத்திரிகைகள் தகவல்

    டொனால்டு டிரம்ப் தொடர்பான ரகசிய தகவல்களை ரஷியா வைத்திருப்பதாகவும் அதை வைத்து டிரம்பை ரஷியா மிரட்டி வருவதாகவும் அமெரிக்க பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் விரைவில் பதவி ஏற்க உள்ளார். இவரது தேர்தல் வெற்றிக்கு ரஷியா உதவியதாகவும், ஓட்டு எந்திரங்களை ஹேக்கிங் முறையில் ரஷியா தன்வசப்படுத்தி அவற்றில் தில்லுமுல்லு செய்து விட்டதாகவும் கூறப்பட்டது.

    இந்த நிலையில் டிரம்ப் தொடர்பான ரகசிய தகவல்களை ரஷியா வைத்திருப்பதாகவும் அதை வைத்து டிரம்பை ரஷியா மிரட்டி வருவதாகவும் அமெரிக்க பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

    அதில் டிரம்ப், தனிப்பட்ட வாழ்க்கையிலும், வர்த்தக ரீதியாகவும் தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் சில வி‌ஷயங்களை செய்துள்ளார். இந்த தகவல் ரஷியாவுக்கு எப்படியோ கிடைத்துள்ளது. இதை வைத்து ரஷியா டிரம்பை மிரட்டி வருகிறது என்று கூறி உள்ளனர்.

    அமெரிக்க உளவுத்துறையின் தகவல்களை மையமாக வைத்து இந்த செய்தி வெளியிட்டு இருப்பதாகவும் அந்த பத்திரிகைகள் கூறுகின்றன.

    ஆனால், இதை டிரம்ப் மறுத்துள்ளார். ரஷியாவுடன் எனக்கு எந்த தொடர்பும் இருந்ததில்லை. நான் எந்த மோசமான தவறும் செய்யவில்லை. எனக்கு நெருக்கடி தர வேண்டும் என்பதற்காக ஆதாரமற்ற செய்திகளை பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. இதை உளவு அமைப்புகள் அனுமதித்து இருக்க கூடாது. ஹிட்லரின் நாஜி ஆட்சியில் அமெரிக்கா இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.

    இதே போல் ரஷியாவும் மறுப்பு தெரிவித்துள்ளது. ரஷியா- அமெரிக்கா இடையே உள்ள உறவை சீர்குலைப்பதற்காக இந்த தவறான செய்திகளை வெளியிட்டு இருக்கிறார்கள் என்று ரஷியா கூறி உள்ளது.
    Next Story
    ×