search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மடிக்கக்கூடிய சாம்சங் ஸ்மார்ட்போன் : அடுத்த ஆண்டில் வெளியாகலாம்
    X

    மடிக்கக்கூடிய சாம்சங் ஸ்மார்ட்போன் : அடுத்த ஆண்டில் வெளியாகலாம்

    சாம்சங் நிறுவனத்தின் மடிக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என செய்திகள் வெளியாகியுள்ளன.
    சியோல்:

    மடிக்கும் திறன் கொண்ட ஸ்மார்ட்போன்கள் வெளியாவது குறித்து நீண்ட காலமாக செய்திகள் வெளியாகி வந்தது. சாம்சங் நிறுவனம் இரண்டு மடிக்கக்கூடிய வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் இவற்றில் ஒன்றை அடுத்த ஆண்டு வெளியிட இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. 

    அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியாக இருக்கும் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் இரண்டு ஃபிளாட் டிஸ்ப்ளே கொண்டிருக்கும், மற்றொரு ஸ்மார்ட்போனில் ஒற்றை வளையும் திறன் கொண்ட OLED டிஸ்ப்ளே கொண்டு வெளியாகும் என இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதோடு இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் தான் நீண்ட காலமாக கூறப்பட்டு வரும் கேலக்ஸி X என்றும் கூறப்படுகிறது.

    சாம்சங் கேலக்ஸி X ஸ்மார்ட்போன் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக தயாரிப்பு பணிகளில் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. மடிக்கும் திறன் கொண்ட ஸ்மார்ட்போனினை சாம்சங் வெளியிடும் என்றாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை சாம்சங் வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

    கேலக்ஸி X ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே வடிவமைப்பு சார்ந்த காப்புரிமையை சாம்சங் நிறுவனம் செப்டம்பர் 2016 இறுதியில் பெற்றது. காப்புரிமை சார்ந்த தகவல்களில் கேலக்ஸி X ஸ்மார்ட்போன் வழக்கமான ஸ்மார்ட்போன் அளவிலேயே இருப்பதோடு, அதனை மடிக்கக்கூடியதாக இருப்பதும் தெரியவந்திருக்கிறது. இதன் கேமராவானது மடிக்கப்பட்ட பாகத்தின் மேல்பகுதியிலும் செல்ஃபி கேமரா மற்றும் ஸ்பீக்கர் போன்றவை போனின் மேல்பக்கமும் பொருத்தப்பட்டுள்ளது. 

    இரண்டு வெவ்வேறு மாடல்களில் வெளியாகும் என கூறப்படும் சாம்சங் கேலக்ஸி X அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மொபைல் காங்கிரஸ் விழா அல்லது நுகர்வோர் மின்னணு தொலைக்காட்சி நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×