search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஃபேஸ்புக்கில் இந்தியர்கள் அதிகம் விவாதித்தவை இவை தான்
    X

    ஃபேஸ்புக்கில் இந்தியர்கள் அதிகம் விவாதித்தவை இவை தான்

    2016 ஆம் ஆண்டில் ஃபேஸ்புக்கில் அதிகம் விவாதிக்கப்பட்ட தலைப்புகள் எவை என்பதை ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.
    சான்பிரான்சிஸ்கோ:  

    மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தை அதிகம் பயன்படுத்துவது இந்தியர்கள் தான். ஃபேஸ்புக் தளத்தை எல்லாவற்றையும் பதிவிட நம்மவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். புகைப்படம், வீடியோ, எழுத்துகள் மற்றும் நேரலை வீடியோ என தங்களுக்கு தோன்றுவதை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இதோடு ஃபேஸ்புக் சார்ந்த வியாபாரங்களும் அதிகரித்து வருகின்றன. 
     
    ஒவ்வொரு ஆண்டும் ஃபேஸ்புக்கில் அதிகம் விவாதிக்கப்பட்ட ட்ரெண்ட் சார்ந்த தகவல்களை தொகுத்து வருடாந்திர ஆய்வறிக்கையை ஃபேஸ்புக் வெளியிட்டு வருகிறது. அதன்படி 2016 ஆம் ஆண்டிற்கான ஃபேஸ்புக் வருடாந்திர ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் உலகளவிலும், இந்தியாவிலும் அதிகம் விவாதிக்கப்பட்ட தலைப்புகள் சார்ந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 

    அந்த வகையில் 2016 ஆம் ஆண்டு ஃபேஸ்புக்கில் இந்தியர்கள் அதிகம் விவாதித்த தலைப்பாக தீபாவளி இடம் பெற்றிருக்கிறது. இதனைத் தொடர்ந்து கிரிக்கெட், உரி தாக்குதல், டோனி திரைப்படம், ஹார்டுவெல், பிரியங்கா சோப்ரா, ரியோ ஒலிம்பிக்ஸ், போக்கிமான் கோ, பதான்கோட் மற்றும் ஐபோன் 7 உள்ளிட்ட தலைப்புகள் இடம் பிடித்திருக்கின்றன. 

    சர்வதேச அளவில் ஃபேஸ்புக்கில் விவாதிக்கப்பட்ட தலைப்புகளில் அமெரிக்க அதிபர் தேர்தல் முதலிடமும், பிரேசில் அரசியல் இரண்டாம் இடமும், மூன்றாவது இடத்தில் போக்கிமான் கோ இருந்ததாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. மேலும் ஃபேஸ்புக் நிறுவனம் “Your Year in Review” எனும் ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது. எனினும் இந்தியாவில் இந்த அம்சம் இன்னும் அறிமுகம் செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

    ஃபேஸ்புக் இந்தியாவில் சுமார் 166 மில்லியன் பயனர்களை கொண்டுள்ளது. இதில் 159 மில்லியன் பேர் மொபைல் போனில் ஃபேஸ்புக் பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது. தினசரி அடிப்படையில் 85 மில்லியன் பேர் ஃபேஸ்புக் பயன்படுத்தி வருகின்றனர், இதில் 81 மில்லியன் பேர் மொபைல் போன் மூலம் ஃபேஸ்புக் பயன்படுத்தி வருகின்றனர்.
    Next Story
    ×