search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆளும் கட்சி தலைவராக ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் மீண்டும் தேர்வு
    X

    ஆளும் கட்சி தலைவராக ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் மீண்டும் தேர்வு

    ஜெர்மன் நாட்டின் ஆளும் கிறிஸ்டியன் ஜனநாயக யூனியன் கட்சியின் தலைவராக அதிபர் ஏஞ்சலா மெர்கல் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    பெர்லின்:

    ஜெர்மனி நாட்டில் தற்போதையை அதிபராக இருப்பவர் ஏஞ்சலே மெர்கல். 62 வயது பெண்மணியான இவர் 2005-ம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிபராக இருந்து வருகின்றார்.

    இந்நிலையில் அடுத்த வருடம் ஜெர்மனியில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனிடையே ஜெர்மனியின் அதிபராக தொடர்ந்து 4-வது முறையாக பணியாற்ற தயாராக உள்ளதாக ஏஞ்சலே மெர்கல் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில், ஜெர்மனியின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியான கிறிஸ்டியன் ஜனநாயக யூனியன் கட்சி ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் ஏஞ்சலே மெர்கல் மீண்டும் கிறிஸ்டியன் ஜனநாயக யூனியன் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் கட்சியின் 89.5 சதவீதம் உறுப்பினர்களின் ஆதரவோடு அவர் தேர்வானார். இதனையடுத்து மேலும் இரண்டு ஆண்டுகள் அவர் கட்சியின் தலைவராக இருப்பார்.

    முன்னதாக மெர்கலின் கட்சி கடந்த 2005, 2009 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அந்த கட்சி தான் மீண்டும் வெற்றி பெற்றும் ஆட்சியை தக்க வைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இத்தகைய நிலையில் அவர் மீண்டும் அக்கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லப்படும் அமெரிக்காவில் இன்னும் ஒரு பெண் அதிபர் கூட உருவாகாத சூழலில், ஜெர்மனி நாட்டின் அதிபராக ஒரு பெண்மணி கோலோச்சி வருவது பிரமிக்கத் தக்க விஷயமாகும்.
    Next Story
    ×