search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்பிள் ஐபேட் ப்ரோ 2 மார்ச் 2017-ல் வெளியாகலாம்
    X

    ஆப்பிள் ஐபேட் ப்ரோ 2 மார்ச் 2017-ல் வெளியாகலாம்

    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் டேப்லெட்கள் மார்ச் மாதம் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
    சான்பிரான்சிஸ்கோ:

    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் ப்ரோ 2 டேப்லெட்டினை மார்ச் மாதம் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிளின் புதிய ஐபேட் 2 டேப்லெட்கள் மூன்று வித மாடல்களில் வெளியிடும் என்றும் மூன்றும் வெவ்வேறு அளவுகளில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    10.9 இன்ச், 12.9 இன்ச் மற்றும் 9.7 இன்ச் என மூன்று அளவுகளில் கிடைக்கும் என்றும், இரு வித மாடல்களில் ஐபேட் டேப்லெட் என மொத்தம் ஐந்து டேப்லெட்களை 2017 ஆம் ஆண்டில் வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இரு ஐபேட்களும் ஐபேட் ஏர் 3 மற்றும் ஐபேட் மினி 5 என பெயரிடப்பட இருக்கிறது. இதோடு ஒரே ஆண்டில் ஐந்து கருவிகளை வெளியிடுவது கடினமான ஒன்று தான்.

    டிசம்பர் மாதத்தில் ஆப்பிள் நிறுவனம் 10.5 இன்ச் டேப்லெட்களை தயாரிக்கும் பணிகளை துவங்க இருப்பதாக ஏற்கனவே வெளியான தகவல்களில் கூறப்பட்டது. தைவானின் விநியோக பிரிவில் இருந்து வெளியான தகவல்களில் 10.5 இன்ச் மற்றும் 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ டேப்லெட்கள் ஆப்பிளின் A10X பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. டேப்லெட்களின் தகவல்களுடன் இவற்றின் விற்பனை அளவு சார்ந்த தகவல்களும் வெளியாகியுள்ளன. அதன்படி 2 மில்லியன் 10.5 இன்ச் டேப்லெட்கள் முதல் காலாண்டு வாக்கில் விற்பனை செய்யப்படலாம்.

    ஆப்பிளின் 10.5 இன்ச் டேப்லெட்கள் கல்வி மற்றும் நிறுவனங்களில் பயன்படுத்த ஏதுவாக இருக்கும். 9.7 இன்ச் ஐபேட்கள் மிகவும் சிறியதாகவும், 12.9 இன்ச் ஐபேட்கள் விலை அதிகமானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. பார்க்ளே அறிக்கையின் படி 10.9 இன்ச் ஐபேட், 9.7 இன்ச் ஐபேட் போன்றே இருக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
    Next Story
    ×