search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் உறவை முறிக்க நினைக்கும் இந்தியாவின் முயற்சி வெற்றி பெறாது: அஜீஸ்
    X

    பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் உறவை முறிக்க நினைக்கும் இந்தியாவின் முயற்சி வெற்றி பெறாது: அஜீஸ்

    பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கிடையே இருக்கும் உறவை முறிக்க நினைக்கும் இந்தியாவின் முயற்சி பலன் அளிக்காது என பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் தெரிவித்துள்ளார்
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கிடையே இருக்கும் நல்லுறவை முறிக்க நினைக்கும் இந்தியாவின் முயற்சி வெற்றி பெறாது என பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் சர்தாஜ் அசிஸ் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அரசாங்கம் தீவிரவாதத்திற்கு ஆதரவாக இருப்பது குறித்த ஆப்கானிஸ்தானின் அறிக்கை இந்தியாவை மகிழ்விக்கும் நோக்கில் வெளியிடப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    'அஷ்ரப் கானியின் அறிக்கை வருந்தத்தக்கதாக இருக்கிறது. இது காபூல் நகரில் பதட்டமான சூழ்நிலை காரணமாக, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்பதை புரிந்துக் கொள்ளக் கூடியதாகவே இருக்கிறது,' என அஜீஸ் தெரிவித்துள்ளார்.

    ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே இருக்கும் உறவு மிகவும் நெருக்கமானது என்பதால், இதை பிரிக்க நினைக்கும் இந்தியாவின் முயற்சி பலனளிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    'ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே இருப்பது மதம் மற்றும் கலாச்சார ரீதியிலான உறவு ஆகும். இதன் காரணமாகவே ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்தை ஒழிக்க நினைக்கிறோம்,' என அவர் இந்தியாவின் அமிர்தசரஸ் நகரில் நடைபெற்ற ஆசியாவின் இதயம் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு நாடு திரும்பியதும் அஜீஸ் தெரிவித்தார்.

    'ஆப்கானிஸ்தானுடனான எங்களது உறவுகள் தனித்துவம் வாய்ந்தது என்பதால் இரு நாடுகளும் பல்வேறு விடயங்களில் ஒன்றினைந்து செயல்பட வேண்டும். சொந்த ஆதாயங்களுக்காக ஆப்கானிஸ்தானை பயன்படுத்திக் கொள்ள இந்தியா முயற்சிக்கிறது. இது ஒரு போதும் நிறைவேறாது’ என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதோடு ஆசியாவின் இதயம் மாநாட்டில் பாகிஸ்தான் செய்தியாளர்களை மதிக்கவில்லை என்றும் அசிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

    'தன் நாட்டுக்கு எதிராக பாகிஸ்தான் நடத்திய அறிவிக்கப்படாத போர் மற்றும் தலிபான் உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவு வழங்கி வருவதற்கு பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி கானி குற்றம்சாட்டியதோடு பாகிஸ்தான் அறிவித்த 500 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் தீவிரவாதத்தை ஒழிக்க பயன்படுத்திக் கொள்ளட்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

    பாகிஸ்தான் ஆதரவளித்து வரும் தீவிரவாத இயக்கங்கள் மீது ஆசியா அல்லது உலக நாடுகள் விசாரணை நடத்தவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    ஆப்கானிஸ்தான் தலைவர் 500 மில்லியன் டாலர்களை பயன்படுத்த வேறு வழிமுறைகளை கையாள இருப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் அஜீஸ் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×