search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்பிள் ஏர்பாட்ஸ் விரைவில் விநியோகம் செய்யப்படும் : டிம் குக் அறிவிப்பு
    X

    ஆப்பிள் ஏர்பாட்ஸ் விரைவில் விநியோகம் செய்யப்படும் : டிம் குக் அறிவிப்பு

    ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் வயர்லெஸ் ஹெட்போன்களை விநியோகம் செய்யும் பணிகள் சில வாரங்களில் துவங்கும் என ஆப்பிள் நிறுவன தலைமை அதிகாரி டிம் குக் உறுதி செய்திருக்கிறார்.
    கலிபோர்னியா:

    ஆப்பிள் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்த ஏர்பாட்ஸ் வயர்லெஸ் ஹெட்போன்களின் விநியோகப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. வரும் வாரங்களில் இவை விநியோகம் செய்யப்படும் என ஆப்பிள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியான டிம் குக் தெரிவித்துள்ளார். 

    2016 ஆம் ஆண்டில் ஆப்பிள் அறிமுகம் செய்த ஐபோன் 7 சீரிஸ் போன்களில் ஹெட்போன் ஜாக் அகற்றப்பட்டது. ஹெட்போன் ஜாக் அகற்றப்பட்டதால் பயனர்கள் வயர் இல்லாமல் இயங்கும் ஹெட்போன்களை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதற்கென ஆப்பிள் நிறுவனம் ஏர்பாட்ஸ் எனும் வயர்லெஸ் ஹெட்போன்களையும் அறிமுகம் செய்தது.

    முன்னதாக அக்டோபர் மாதத்தில் ஆப்பிள் ஏர்பாட்ஸ் பயனர்களுக்கு விநியோகம் செய்யப்படும் என ஆப்பிள் அறிவித்தாலும், திட்டமிட்டப்படி அவை வெளியாகவில்லை. இந்நிலையில் ஆப்பிள் பயனரின் கேள்விக்கு டிம் குக் அளித்த பதிலில் ஆப்பிள் ஏர்பாட்ஸ் ஹெட்போன்கள் வரும் வாரங்களில் விநியோகம் செய்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.

    செப்டம்பர் மாதம் நடைபெற்ற விழாவில் ஆப்பிள் நிறுவனம் ஹெட்போன் ஜாக் இல்லாத ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது அனைவரும் அறிந்ததே. ஐபோன்களுடன் பயன்படுத்துவதற்கென ஆப்பிள் பிரத்தியேகமாக வடிவமைத்த வயர்லெஸ் ஏர்பாட்ஸ் ஹெட்போன்களை அறிமுகம் செய்தது. இந்திய மதிப்பில் இவற்றின் விலை ரூ.15,400 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

    ஏர்பாட்ஸ் ஹெட்போன்கள் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய W1 வயர்லெஸ் சிப் மூலம் இயக்கப்படுகிறது. இது ஆப்பிள் நிறுவனத்தின் முதல் வயர்லெஸ் சிப் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் ஏர்பாட்ஸ் அதிவேகமாக ஐபோனுடன் இணைந்து கொள்ளும். இவற்றில் பொருத்தப்பட்டிருக்கும் டூயல் ஆப்டிக்கல் சென்சார்கள், ஹெட்போன்கள் காதில் பொருத்தப்பட்டதும் ஆன் ஆகும் படியும் நீங்கள் கேட்க தயாரானதும் இசைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏர்பாட்ஸ் ஹெட்போன்களை இரு முறை தட்டினால் சிரி ஆப்ஷன் இயக்கப்படும், இதோடு மைக்ரோபோன் மூலம் பேசும் போது வெளிப்புற சத்தங்களை தடுக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்களின் படி ஏர்பாட்ஸ் ஹெட்போன்களானது வரும் ஜனவரி மாதத்திற்குள் விநியோகம் செய்யப்படும் என தெரிகிறது.
    Next Story
    ×