search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய 5 பவுண்டு நோட்டை வாங்க மறுக்கும் வெஜிடேரியன் கபே
    X

    புதிய 5 பவுண்டு நோட்டை வாங்க மறுக்கும் வெஜிடேரியன் கபே

    இங்கிலாந்து அரசு வெளியிட்டுள்ள புதிய 5 பவுண்டு நோட்டில் ஒருவகை விலங்கின் கொழுப்பு கலந்திருப்பதால் அந்த நோட்டை வாங்க ரெஸ்டாரண்ட் ஒன்று மறுத்துள்ளது.
    கிழக்கு இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் ‘ரெயின்போ கபே’ என்ற வெஜிடேரியன் ரெஸ்டாரண்டை நடத்தி வருபவர் ஷரோன் மெய்ஜிலாண்ட். இவர் புதிதாக வெளியிடப்பட்டுள்ள இங்கிலாந்து அரசின் 5 பவுண்டு நோட்டை தயாரிப்பதற்காக விலங்கில் இருந்து எடுக்கப்பட்ட கொழுப்பு சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் புதிய 5 பவுண்டு நோட்டை வாங்கமாட்டேன் என்று கடந்த புதன்கிழமை அன்று அறிவித்தார்.

    புதிய 5 பவுண்டு நோட்டுக்கு சில வெஜிடேரியன் மற்றும் சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதனடிப்படையில் ஷரோன் இந்த முடிவை எடுத்துள்ளார்.

    இதுகுறித்து ஷரோன் கூறுகையில் ‘‘இந்த ரெயின்போ ரெஸ்டாரண்ட் மூலம் கடந்த 30 வருடங்களாக நாங்கள் தரமான சைவ உணவை வழங்கி வருகிறோம். எங்களால் முடிந்த அளவிற்கு நெறிமுறையை கடைபிடிக்க முயற்சி செய்து வருகிறோம். நாங்கள் சிறந்த நெறிமுறை ரெஸ்டாரண்ட் வகைக்கான உணவு பார்வையாளர்களின் மாதாந்திர விருதில் 2-வது இடத்தை கடந்த ஐந்து வருடங்களாக பெற்ற வருகிறோம்’’ என்றார்.



    ரெயின்போ ரெஸ்டாரண்ட் நோட்டை வாங்க மறுக்கும் விவகாரம் குறித்து இங்கிலாந்து வங்கி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த அறிவிப்பால் ரெயின்போ ரெஸ்டாரண்டை ஆன்லைன் மூலம் வசை பாடி வருகின்றனர்.

    இந்த நோட்டுக்கு எதிரான ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் எதிர்ப்பு தெரிவித்து மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.
    Next Story
    ×