search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்த ஆண்டின் சிறந்த ஆப்ஸ் போக்கிமான் கோ: கூகுள் பிளே அறிவித்தது
    X

    இந்த ஆண்டின் சிறந்த ஆப்ஸ் போக்கிமான் கோ: கூகுள் பிளே அறிவித்தது

    இந்தியாவில் சட்டப்பூர்வமாக வெளியாகாவிட்டாலும், போக்கிமான் கோ செயலி இந்த ஆண்டில் முதலிடம் பிடித்திருப்பதாக கூகுள் பிளே அறிவித்துள்ளது.
    கூகுள் பிளே சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த செயலி மற்றும் விளையாட்டுகள் அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் 2016 ஆம் ஆண்டின் சிறந்த செயலிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    கூகுள் பிளே ஸ்டோரில் அதிகம் பயனப்டுத்தப்பட்டு நல்ல விமர்சனங்களை குவித்த ஆப்ஸ் மற்றும் கேம்களை தேர்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் சிறந்த செயலிகள், கேம்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் புத்தகங்கள் உள்ளிட்டவற்றை கூகுள் பிளே அறிவித்து வருகிறது. அவ்வாறு 2016 ஆம் ஆண்டிற்கான சிறந்த செயலிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    கூகுள் அறிவித்திருக்கும் பட்டியலில் சர்வேதச அளவில் துவங்கி, ஒவ்வொரு நாடு வரையிலாக என தனித்தனியே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. கூகுள் இணையப் பக்கத்தில் பட்டியலிடப்பட்டிருக்கும் சிறந்த செயலிகளை பயனர்கள் பார்க்க வழி செய்யப்பட்டுள்ளது. பயனர்கள் தங்களது நாட்டின் சிறந்த ஆப்ஸ் மற்றும் கேம்களை இங்கு தெரிந்து கொள்ள முடியும்.   

    கூகுள் பிளே இந்தியாவை பொருத்த வரை இந்தியாவில் வெளியாகாத போக்கிமான் கோ முதலிடம் பிடித்திருக்கிறது. இந்த ஆண்டின் சிறந்த கேமாக கிளாஷ் ராயல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிஸ்மா இந்த ஆண்டின் சிறந்த செயலியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஆப்ஸ் மற்றும் கேம்களுக்கென வெவ்வேறு தலைப்புகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  

    செயலிகளை பொருத்த வரை மிகவும் வித்தியாசமான செயலி, அதிகம் பகிர்ந்து கொள்ளப்பட்ட செயலி, அழகிய செயலி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செயலி, டாப் டிரென்டிங், அதிக பொழுதுபோக்கான செயலி உள்ளிட்டவைகளோடு கேமிங் பிரிவுகளிலும் பல்வேறு தலைப்புகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பயனர்கள் கூகுள் இணையப்பக்கம் சென்று முழு விருது பட்டியலை தெரிந்து கொள்ள முடியும்.
    Next Story
    ×