search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வளைந்த டிஸ்ப்ளே கொண்ட புதிய ஐபோன் 8
    X

    வளைந்த டிஸ்ப்ளே கொண்ட புதிய ஐபோன் 8

    2017 இல் ஆப்பிள் அறிவிக்க இருக்கும் ஐபோன் 8 ஸ்மார்ட்போன் எவ்வித சிறப்பம்சங்கள் கொண்டிருக்கும் என்ற தகவல்கள் இணையத்தில் கசிந்திருக்கின்றன.
    ஆப்பிள் ஐபோன்களின் பத்தாம் ஆண்டு விழா அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் ஐபோன் 8 குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்திருக்கின்றன. உலகெங்கும் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஐபோன் 8 சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்களின் மூலம் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 8 இல் அதிகளவு புத்தம்புது அம்சங்களை வழங்க இருப்பது தெரிய வந்திருக்கிறது.

    அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கும் நிலையில் புதிய ஐபோனின் அம்சங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. எனினும் மக்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படுவதால் ஐபோன் 8 சிறப்பம்சங்கள் ஆப்பிள் நிறுவனத்துடன் சார்ந்த பல்வேறு வட்டாரங்களில் இருந்து அவ்வப்போது கசிந்து விடுகிறது. ஐபோன் 8 இல் வழங்கப்பட இருப்பதாக கூறப்படும் சில முக்கிய சிறப்பம்சங்கள் பின்வருமாறு..

    இந்த ஆண்டு வெளியான ஐபோனிலேயே அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வயர்லெஸ் சார்ஜிங் அம்சம், 2017 ஆம் ஆண்டு வெளியாகும் ஐபோனில் கட்டாயம் இடம்பெறும் என கூறப்படுகிறது. வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்திற்கென தனி ஆய்வு மையத்தை கட்டமைத்திருப்பது இதனை உறுதி செய்யும் வகையில் அமைகிறது. இதன் காரணமாக ஐபோன் 8இல் கட்டாயம் வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் இடம் பெறலாம்.

    ஆப்பிள் ஐபோன்களின் டிஸ்ப்ளே தரம் எத்தகைய சிறப்பானதாக இருந்தாலும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும் போது ஆப்பிள் நிறுவனம் பின்தங்கிய நிலையில் தான் இருக்கிறது. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் அடுத்து வெளியிடும் ஸ்மார்ட்போனில் வளைந்த OLED டிஸ்ப்ளே மூலம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு சவால் விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டிஸ்ப்ளே அளவுகளை பொருத்த வரை 2017 இல் ஆப்பிள் நிறுவனம் மூன்று வித அளவுகளில் ஐபோன்களை வெளியிட இருக்கிறது. 4.7 இன்ச், 5.5 இன்ச் மற்றும் 5.8 இன்ச் என மூன்று வித டிஸ்ப்ளே அளவுகளில் ஐபோன் 8 போனினை எதிர்பார்க்கலாம். ஐபோன்களின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றான கேமரா இம்முறை அதிகம் மேம்படுத்தப்பட இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

    அதன் படி ஐபோன் 8இல் 3D டூயல் லென்ஸ் கொண்ட கேமரா அமைப்பு வழங்கப்படலாம். இதற்கென ஆப்பிள் நிறுவனம் லின்க்ஸ் எனும் இஸ்ரேலிய நிறுவனத்தை சமீபத்தில் கைப்பற்றியது. இந்நிறுவனம் 3D புகைப்படங்கள் சார்ந்த பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×