search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி போரை விரும்புபவர்: பாக். முன்னாள் அதிபர் மு‌ஷரப் சொல்கிறார்
    X

    பிரதமர் மோடி போரை விரும்புபவர்: பாக். முன்னாள் அதிபர் மு‌ஷரப் சொல்கிறார்

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி போரை விரும்புபவர் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப் தெரிவித்துள்ளார்.
    லாகூர்:

    காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவர் புர்கான் வானியும், பாகிஸ்தானின் லஸ்கர்-இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ்சயீத் ஆகியோர் டெலிபோன் பேச்சை இந்திய உளவுத் துறையினர் வழிமறித்து டேப் செய்தனர். அதன் ஆடியோ சி.என்.என்.- நியூஸ் 18 என்ற டி.வி. சேனலில் வெளியானது.

    அதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் மு‌ஷரப், சி.என்.என்.-நியூஸ் 18 டெலிவி‌ஷனுக்கு லாகூரில் இருந்து டெலிபோனில் கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது-

    புர்கான் வானியும், ஹபீஸ் சயீத்தும் ஒருவரையொருவர் தொடர்பில் இருந்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை. ஹபீஸ் சயீத் படித்த மனிதர். ஒரு என்ஜினீயர். லஷ்கர்-இ- தொய்பா பாகிஸ்தானின் சிறந்த தொண்டு நிறுவனம்.

    வெள்ளத்தின் போது அந்த அமைப்பு மக்களுக்காக சிறப்பாக பணியாற்றியது. புர்கான் வானியை பொறுத்தவரை இந்திய அரசின் கொள்கைகள் தான் அவரை ஆயுதங்கள் ஏந்த தூண்டியது. புர்கான் வானியின் குடும்பத்தினரை துன்புறுத்தி ஆயுதங்கள் ஏந்தி போரிட இந்திய ராணுவம் அவரை தூண்டியது.



    ஹபீஸ் சயீத் ஒரு தீவிரவாதி என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. நான் ஒரு வக்கீல் ஆக இருந்தால் இந்த வழக்குக்கு எதிராக கோர்ட்டில் வாதாடி இருப்பேன். நான் ஒரு அதிபராக இருந்தால் அவரது வழக்கை எதிர்த்து ஐ.நா.வில் போராடி இருப்பேன்.

    உலகில் பாகிஸ்தானை விட இந்தியாவுக்கு சிறந்த செல்வாக்கு உள்ளது. ஆனால் இந்திய அரசு பேச்சு வார்த்தைக்கு விரும்பாது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி போரை விரும்புபவர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×