search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் அமெரிக்க கம்பெனிகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை
    X

    வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் அமெரிக்க கம்பெனிகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை

    வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் அமெரிக்க கம்பெனிகள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் வருகிற ஜனவரி 20-ந்தேதி புதிய அதிபராக பதவி ஏற்கிறார். தேர்தல் பிரசாரத்தின் போது அமெரிக்கர்களுக்கான வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார்.

    மேலும் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு அளித்து அங்கிருந்து இறக்குமதி செய்யும் கம்பெனிகளுக்கு 35 சதவீதம் வரி விதிக்கப்படும் என எச்சரித்து இருந்தார்.

    தற்போது புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இண்டியானாவில் ஏர்கண்டிசன் எந்திரங்கள் தயாரிக்கும் முன்னணி நிறுவனத்துக்கு சமீபத்தில் அவர் சென்று இருந்தார். அந்த நிறுவனம் தனது தொழிற்சாலையை மெக்சிகோவுக்கு மாற்ற திட்டமிட்டிருந்தது. இதனால் 1100 வேலை வாய்ப்புகள் வீணாகியது.

    அதை தொடர்ந்து முன்னணி நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். அதன்படி அமெரிக்காவில் இருந்து எந்தவொரு நிறுவனத்தையும், வேலை வாய்ப்பையும் வெளிநாடுகளுக்கு எடுத்து செல்ல வேண்டாம். அப்படி சென்றால் கடும் விளைவுகளையும், தண்டனையையும் சந்திக்க நேரிடும்.

    மேலும் வர்த்தகத்துக்கான வரியை 35 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்க இருக்கிறோம். இதனால் வர்த்தகத்தில் உலகிலேயே நாம் உயர்ந்த இடத்துக்கு செல்ல முடியும் என்றார்.

    மேலும் அவர் கூறும் போது, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு நிறைய பேர் வருகின்றனர். அவர்கள் யார் என்பது நமக்கு தெரியாது. அவர்கள் என்ன நினைக்கிறார்கள், எதற்காக வந்து இருக்கிறார்கள் என்றும் தெரியாது. அவர்களை நாம் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    இதற்கிடையே, வெளிநாட்டினரின் வருகையை தடுக்க மெக்சிகோ எல்லையில் நீண்ட சுவர் கட்ட டிரம்ப் அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×