search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துபாய் வாழ் இந்திய சிறுமிக்கு சர்வதேச அமைதி விருது
    X

    துபாய் வாழ் இந்திய சிறுமிக்கு சர்வதேச அமைதி விருது

    சுற்றுச் சூழல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்ததற்காக துபாய் வாழ் இந்திய சிறுமி கேஹாசன் பாசுவுக்கு சர்வதேச அமைதி விருது அளிக்கப்பட்டுள்ளது.
    ஹாஹூ:

    நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில் 16-வது சர்வதேச குழந்தைகளுக்கான அமைதி விருது வழங்கும் விழா நடந்தது. இவ்விருது வழங்கும் விழாவில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட துபாய் வாழ் சிறுமி கேஹாசன் பாசுவுக்கு அமைதிக்கான விருது வழங்கப்பட்டது.

    16 வயதான கேஹாசன் பாசு, தனது 8 வயதிலேயே சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரசாரத்தை தொடங்கியுள்ளார். துபாயில் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் விழிப்புணர்வு பிரசாரத்தையும் மேற்கொண்டு வந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் பல சுற்றுச் சூழல் திட்டங்களையும் வெற்றிகரமாக செய்துள்ளார் கேஹாசன்.

    ஹேக் நகரில் நடைபெற்ற விழாவில் கடந்த 2006ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வென்ற முகமது யூனஸ், கேஹாசனுக்கு விருதை வழங்கி கவுரவித்தார்.

    இது குறித்து யுனஸ் கூறுகையில், “இது போன்ற ஒரு இளம் நபருக்கு இது ஒரு மிகப்பெரிய சாதனை. அவருடைய முக்கிய செயல்பாட்டின் மூலமாக எல்லோரையும் சென்றடைந்துள்ளார். நாம் வாழ்வதற்கும் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சிக்கும் மிகவும் ஆரோக்கியமான சுற்றுச் சூழல் மிகவும் அவசியம் ஆகும்.

    அதனால் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பது ஒரு முன் நிபந்தனையாக உள்ளது. அத்தகைய எதிர்காலத்தை நோக்கி செயல்பட வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கு உள்ளது என்று கேஹாசன் நமக்கு கற்றுக் கொடுத்துள்ளார்” என்றார்.

    விருது பெற்ற பின்னர் பெசிய கேஹாசன் கூறுகையில், இத்தகைய சுற்றுச் சூழல் பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொள்ள போவதாக தெரிவித்தார்.
    Next Story
    ×