search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி 10 பேர் பலி
    X

    அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி 10 பேர் பலி

    அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 10 பேர் பலியாகி உள்ளனர். 1200 ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாகாண விவசாய துறை தெரிவித்துள்ளது.

    நியூயார்க்:

    அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் காட்டுத் தீ பரவியது. அங்குள்ள காட்லின்பர்க், பிஜியின் போர்ஜ் ஆகிய நகரங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 28-ந்தேதி காட்லின் பர்க் நகர காட்டில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவரால் தீ பரவியது.

    அப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவியதால் தீ அணைக்க முடியாத அளவுக்கு தொடர்ந்து பரவி வருகிறது. டென்னிசி மாகாணத்தில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 10 பேர் பலியாகி உள்ளனர். 45 பேர் காயம் அடைந்துள்ளனர். 700 கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன.

    கடும் வறட்சி காரணமாக டென்னிசி மாகாணத்தில் இதுவரை 26 தடவை காட்டுத் தீ பிடித்துள்ளது. 1200 ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாகாண விவசாய துறை தெரிவித்துள்ளது.

    Next Story
    ×