search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அலெப்போ நகரை மீட்கும் வரையில் போரிடுவோம் - ரஷியா
    X

    அலெப்போ நகரை மீட்கும் வரையில் போரிடுவோம் - ரஷியா

    சிரியாவில் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான அலெப்போ நகரை மீட்போம் என ரஷிய அரசு அறிவித்துள்ளது.
    அங்காரா:

    சிரியாவில் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான அலெப்போ நகரை மீட்பதற்காக அதிபர் பஷார் அல் ஆசாத் படைகள் கடும் சண்டையில் ஈடுபட்டு வருகின்றன.

    அதிபர் ஆதரவு படைகளுக்கு ரஷிய படைகள் பக்க பலமாக உள்ளன.

    இந்த நிலையில் துருக்கி சென்றுள்ள ரஷிய வெளியுறவு மந்திரி செர்கெய் லாவ்ரோவ், அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி மெவ்லுட் காவுசோக்லுவை நேற்று சந்தித்து பேசினார்.

    இந்த சந்திப்பை தொடர்ந்து இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.

    அப்போது ரஷிய வெளியுறவு மந்திரி செர்கெய் லாவ்ரோவ் நிருபர்களிடம் கூறும்போது, “அலெப்போவில் மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க ரஷியா தொடர்ந்து முயற்சிக்கும். அலெப்போ நகரை கிளர்ச்சியாளர்களிடம் இருந்து மீட்கிறவரையில் ரஷிய படைகள் அங்கிருந்து போரிடும்” என்றார்.

    அதே நேரத்தில், “அலெப்போவிலும், சிரியாவின் எஞ்சிய பகுதிகளிலும் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டியது அவசியம் என்பதை துருக்கியும், ரஷியாவும் ஒப்புக்கொண்டுள்ளன” என துருக்கி வெளியுறவு மந்திரி மெவ்லுட் காவுசோக்லு கூறினார். 
    Next Story
    ×