search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கள் நாட்டு பொருட்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் இருதரப்பு உறவு பாதிக்கும்: சீனா எச்சரிக்கை
    X

    தங்கள் நாட்டு பொருட்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் இருதரப்பு உறவு பாதிக்கும்: சீனா எச்சரிக்கை

    தங்கள் நாட்டு பொருட்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் இருதரப்பு பொருளாதார உறவில் பாதிப்பு ஏற்படும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
    புதுடெல்லி:

    நாடுமுழுவதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சமூக வலைதளங்களில் சீனப் பட்டாசுகளுக்கு எதிர்ப்பு நிலவி வருகிறது. அதபோல் பொதுவாகவே சீனப் பொருட்களுக்கு எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

    பாரதீய ஜனதா அகில இந்திய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா சீன பொருட்களை இந்திய மக்கள் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டர் வலைதளத்தில் ஒரு கருத்து வெளியிட்டு இருந்தார்.

    அதில், சீன பொருட்களை இந்திய மக்கள் வாங்க கூடாது. இந்திய பொருட்களையே வாங்க வேண்டும். இது சம்பந்தமாக உறவினர்கள், நண்பர்களிடம் கருத்துக்களை பரிமாறுங்கள். ஜெய்ஹிந்த் என்று கூறி இருந்தார்.

    இந்த கருத்து சர்ச்சையை எதிர்ப்படுத்தியதை தொடர்ந்து அவர் தன்னுடைய கருத்தினை வலைதளத்தில் இருந்து எடுத்து விட்டார்.

    இந்நிலையில், தங்கள் நாட்டு பொருட்களை புறக்கணிப்பு தெரிவித்தால் இருதரப்பு பொருளாதார உறவில் பாதிப்பு ஏற்படும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த புறக்கணிப்பால் ஏற்றுமதியில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. முறையான மாற்றுப் பொருட்கள் இல்லாமல் சீனப் பொருட்களை புறக்கணித்தால் பாதிப்பு இந்திய வியாபாரிகளுக்கும், நுகர்வோர்களுக்கும் தான் என்றும் சீனா கூறியுள்ளது.
    Next Story
    ×