search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அணை கட்டுவதற்கு நிதி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி மறுப்பு
    X

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அணை கட்டுவதற்கு நிதி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி மறுப்பு

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மிகப்பெரிய அணை கட்டுவதற்கு நிதி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி மறுப்பு தெரிவித்துள்ளது.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் எல்லைப் பகுதியில் சிந்து நதியின் குறுக்கே ரூ.93,610 கோடி செலவில் மிகப்பெரிய அணை கட்ட சீனாவுடன் பாகிஸ்தான் ஒப்பந்தம் செய்துள்ளது.

    இந்த அணை கட்டுவதற்கு ஆசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பல்வேறு நிதியகங்களிலும் நிதி உதவியை பாகிஸ்தான் அரசு நாடி வருகிறது.

    இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மிகப்பெரிய அணை கட்டும் பாகிஸ்தான் அரசுக்கு நிதி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி(ஏடிபி) மறுப்பு தெரிவித்துள்ளது.



    இது தொடர்பாக ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் டகேஹிகோ நகோ செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாங்கள் உண்மையில் எவ்வித ஒப்பந்தமும் செய்யவில்லை. இது குறித்து நாங்கள் இன்னும் முடிவு எடுக்கவில்லை. இது மிகப்பெரிய திட்டம். நிறைய பணம் கோரப்பட்டுள்ளது.

    சிந்து நதியின் கில்ஜிட்-பல்திஸ்தான் பகுதியில் கட்டப்பட திட்டமிடப்பட்டுள்ள இந்த அணை பாகிஸ்தானின் ஆற்றல் மற்றும் பாசன தேவைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்” என்று தெரிவித்தார்.

    ஏற்கனவே பாகிஸ்தான் ஜீலம் நதியின் குறுக்கே அணை கட்ட முடிவு செய்த போது அதனை மத்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×