search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சமூக வலைதளம் பயன்படுத்தியதால் விவாகரத்து: 2 மணி நேரத்தில் முடிந்து போன மணவாழ்க்கை
    X

    சமூக வலைதளம் பயன்படுத்தியதால் விவாகரத்து: 2 மணி நேரத்தில் முடிந்து போன மணவாழ்க்கை

    மணப்பெண் சமூக வலைதளத்தில் தனது புகைப்படத்தை பதிவேற்றியதால் ஆத்திரமடைந்த மணமகன் திருமணமான இரண்டு மணி நேரத்தில் அவரை விவாகரத்து செய்துள்ளார்.
    துபாய்:

    சவுதியை சேர்ந்த ஒருவர் திருமணத்துக்குப் பின் சமூக வலைதளங்களில் புகைப்படம் எதையும் பதிவு செய்யக்கூடாது என நிபந்தனை விதித்து பெண் ஒருவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

    திருமணத்திற்கு முன் மணமகனின் நிபந்தனைகளுக்கு ஒத்துக்கொண்ட மணப்பெண் திருமணம் முடிந்த சில நிமிடங்களிலேயே நிபந்தனைகளைக் காற்றில் பறக்க விட்டு 'ஸ்நாப் சாட்' என்னும் சமூக வலைதளத்தில் திருமண புகைப்படங்களை தனது தோழிகளுக்கு அனுப்பி வைத்தார்.

    இதனைத் தெரிந்து கொண்ட மணமகன் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் புகைப்படம் வெளியிட்டதால் திருமணமான இரண்டு மணி நேரத்தில் மணமகன் விவாகரத்து வரை சென்றது தங்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக மணப்பெண் தரப்பு தெரிவித்துள்ளது.
    Next Story
    ×