search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீனா வெடி விபத்தில் பலி எண்ணிக்கை  14 ஆக உயர்வு
    X

    சீனா வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

    சீனாவின் வடமேற்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
    பீஜிங்:

    சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஷாங்சி மாகாணத்தில் க்சின்மின் என்ற இடத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஐந்து வீடுகள் தரைமட்டமாகின. இதையடுத்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று கட்டிட இடிபாடுகளில் இருந்து 7 உடல்கள் மீட்கப்பட்டன. பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    இந்நிலையில் இன்று மேலும் 7 பேர் பலியானதையடுத்து உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    சீனாவில் வசிக்க சொந்தமாக நிலம் இல்லாதவர்களுக்காக நடமாடும் தற்காலிக வீடுகள் வாடகைக்கு விடப்படுகின்றன.

    அவ்வகையில், வாடகைக்கு விடப்பட்டு க்சின்மின் என்ற இடத்தில் குடியிருப்பு பகுதிக்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருந்த இந்த தற்காலிக (ரெடிமேட்) வீடுகள் வெடித்து சிதறியதில் அருகாமையில் உள்ள 58 வீடுகளும் 63 கார்களும் சேதமடைந்தன.

    காயமடைந்த 147 பேரில் 41 பேர் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியதாகவும், 101 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

    Next Story
    ×