search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க தூதரின் அருணாச்சல பிரதேச வருகைக்கு சீனா கடும் எதிர்ப்பு
    X

    அமெரிக்க தூதரின் அருணாச்சல பிரதேச வருகைக்கு சீனா கடும் எதிர்ப்பு

    அருணாச்சல பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமெரிக்க தூதர் கலந்து கொண்டதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
    பீஜிங்:

    இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் ரிச்சர் வெர்மா கடந்த அக்டோபர் 22-ம் தேதி அருணாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

    அருணாச்சல பிரதேச முதல்-மந்திரி பெமா காண்டு அழைப்பின் பேரில் அமெரிக்க தூதர் வெர்மா சர்ச்சைக்குரிய தவாங்க் பகுதிக்கு வருகை புரிந்தார்.

    இது தொடர்பான தகவலை தனது டுவிட்டர் வலைதளத்தில் ரிச்சர்டு வெர்மா பதிவு செய்துள்ளார்.

    இந்நிலையில், அருணாச்சல பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க தூதர் கலந்து கொண்டதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் லு கங் கூறுகையில், ’இந்தியா சீனா எல்லை விவகாரத்தில் அமெரிக்கா தலையீடு தேவையில்லாத சிக்கலை ஏற்படுத்தும், அமைதியை சீர்குலைக்கும். இந்த விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள சீனா விரும்புகிறது’ என்றார்.

    முன்னதாக அருணாச்சல பிரதேச எல்லை விவகாரத்தில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நீண்ட காலமாக சிக்கல் நிலவி வருகிறது. அருணாச்சல் பிரதேச எல்லையில் சுமார் 90 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு தெற்கு திபெத்தை சேர்ந்தது என்று சீனா கூறி வருகிறது.

    இதனால் அருணாச்சல பிரதேசத்தில் சர்ச்சைக்குரிய பகுதிக்கு இந்திய தலைவர்கள் வருகை புரியும் பொழுதெல்லாம் சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
    Next Story
    ×