search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்பை விட ஹிலாரி 12 புள்ளிகள் முன்னிலை
    X

    அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்பை விட ஹிலாரி 12 புள்ளிகள் முன்னிலை

    அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்பை விட ஹிலாரி கிளிண்டன் 12 புள்ளிகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் இருக்கிறார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந்தேதி நடக்கிறது. அதில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும் போட்டியிடுகின்றனர்.

    தேர்தலுக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இருவரும் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இவர்கள் இருவரும் 3 முறை நேரடி விவாதத்தில் ஈடுபட்டு மக்கள் மத்தியில் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தினர். அதை தொடர்ந்து ஏபிசி செய்தி நிறுவனம் பொது மக்களிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தியது.

    அதில் ஹிலாரி கிளிண்டன் 50 சதவீதமும், டொனால்டு டிரம்ப் 38 சதவீதமும் வாக்குகளை பெற்றுள்ளனர். விபரேசன் கட்சியை சேர்ந்த காரி ஜான்சன் 5 சதவீத வாக்குகளையும், கிரீன் கட்சியை சேர்ந்த ஜில் ஸ்டீன் 2 சதவீத ஓட்டுகளையும் பெற்றுள்ளனர்.

    அதன் மூலம் ஹிலாரி கிளிண்டன் டொனால்டு டிரம்பைவிட 12 புள்ளிகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் இருக்கிறார். இந்த தகவலை சி.என்.என். தெரிவித்துள்ளது.
    Next Story
    ×