search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எவரெஸ்டில் ஏறிய முதல் பெண் மரணம்
    X

    எவரெஸ்டில் ஏறிய முதல் பெண் மரணம்

    உலகின் மிகப்பெரிய எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய ஜப்பானை சேர்ந்த முதல் பெண்மணி ஜங்கோதபே புற்றுநோயால் உயிரிழந்தார்.
    டோக்கியோ:

    ஜப்பான் நாட்டை சேர்ந்த மலை ஏறும் வீராங்கனை ஜங்கோதபே (77). புற்று நோயால் அவதிப்பட்ட இவர் நேற்று மரணம் அடைந்தார்.

    1975-ம் ஆண்டு மே மாதம் தனது 35-வது வயதில் உலகில் மிகப்பெரிய எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். இதன் மூலம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் பெண் என்ற பெருமை பெற்றார்.

    இவர் 2011-ம் ஆண்டில் பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட புகுஷிமா பகுதியை சேர்ந்தவர். புற்று நோய் பாதித்த இவர் சைடமாவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் ஜங்கோதபே சிகிச்சை பலனின்றி இறந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×