search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டொனால்ட் டிரம்ப்பின் திருவிளையாடல்: அமெரிக்க தேர்தல் களத்தை சூடேற்றும் பிரசாரப்படம் வெளியீடு
    X

    டொனால்ட் டிரம்ப்பின் திருவிளையாடல்: அமெரிக்க தேர்தல் களத்தை சூடேற்றும் பிரசாரப்படம் வெளியீடு

    அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்துவரும் நிலையில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்புக்கு எதிரான பிரசார சினிமாவை பிரபல ஹாலிவுட் ஆவணப்பட இயக்குனரான மைக்கேல் மூர் வெளியிட்டுள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் நாடு முழுவதும் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதுவும் இந்த முறை சில அநாகரிகமான பிரசாரம் மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

    ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனை ஓரினச் சேர்க்கைப் பிரியர் என அவரை எதிர்த்து போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் கூறிவருவதும், டிரம்ப் ஒரு சரியான பெண்பித்தர் என ஹிலாரி குற்றம்சாட்டுவதும் ஊடகங்களுக்கு பெருந்தீனியாக அமைந்துள்ளன.

    குறிப்பாக, டிரம்ப் மீது சமீபத்தில் 11 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். இதை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.

    இதற்கிடையில், டொனால்ட் டிரம்ப்பின் பலவீனங்களையும், ஹிலாரியின் சாதகமான அம்சங்களையும் மையப்படுத்தி, ஆஸ்கர் விருதுபெற்ற பிரபல ஹாலிவுட் ஆவணப்பட இயக்குனரான மைக்கேல் மூர் என்பவர் ஓஹியோ மாநிலத்தின் நியூஆர்க் நகரில் உள்ள மிட்லன்ட் தியேட்டரில் பிரசார நாடகம் ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்தார். அந்த நாடகத்துக்கு தடை விதிக்கப்பட்டது.



    இதையடுத்து, பரபரப்புக்கு பேர்போன மைக்கேல் மூர், இரண்டே நாட்களில் தனது கற்பனையை ஆவணப்படமாக உருவாக்கி விட்டார். முன்னர், அமெரிக்க தேர்தலில் போட்டியிட்ட ஜார்ஜ் டபிள்யூ புஷ்-ஐ எதிர்த்தும், அவரது கொள்கைகளை விமர்சித்தும் இவர் தயாரித்த "Fahrenheit 9/11" என்ற ஆவணப்படம் அவரை வீட்டுக்கு வழியனுப்பி வைத்தது.

    இந்நிலையில், தனது புதிய தயாரிப்பான ‘மைக்கேல் மூர் இன் டிரம்ப்லேன்ட்’ (Michael Moore in TrumpLand) என்ற படத்தில் இவர் மட்டுமே நடித்து, அந்தப் படத்தின் இலவச சிறப்புக் காட்சியை நியூயார்க் நகரில் உள்ள ஐ.எப்.சி. சென்டரில் வெற்றிகரமாக நடத்தினார்.

    கடந்த புதன்கிழமையில் இருந்து வர்த்தக ரீதியிலான கட்டணக் காட்சிகளாக இந்தப் படம் திரையிடப்படுகிறது.

    73 நிமிடங்கள் ஓடும் ‘மைக்கேல் மூர் இன் டிரம்ப்லேன்ட்’ படத்தில் டொனால்ட் டிரம்ப்பை எரிச்சலூட்டும் வகையில் ஏதுமில்லை. ஹிலாரியை ஏன் ஆதரிக்க வேண்டும்? என தனது கருத்தை மைக்கேல் மூர் பலமாக பதிவு செய்துள்ளார் என அமெரிக்க திரை விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×