search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டொனால்டு டிரம்ப் மீது நிர்வாண சினிமா நடிகை செக்ஸ் புகார்
    X

    டொனால்டு டிரம்ப் மீது நிர்வாண சினிமா நடிகை செக்ஸ் புகார்

    அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மீது 11-வதாக நிர்வாண சினிமா நடிகை ‘செக்ஸ்’ புகார் கூறியுள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக ரியல் எஸ்டேட் தொழில் அதிபரும் கோடீசுவரருமான டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அவர் மீது பெண்கள் குறித்து இழிவான கருத்துக்கள் கூறிய வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.

    அதன் பின்னர் சம்மர் ஷெர்வோஸ் என்ற பெண் டிரம்ப் மீது செக்ஸ் புகார் கூறினார். தொடர்ந்து 10 பெண்கள் இது போன்று அவர் மீது ‘செக்ஸ்’ புகார்களை கூறினர். இறுதியாக கரீனா வித்ஜீனியா என்ற பெண்ணும் இப்புகார் கூறினார்.

    இதனால் அமெரிக்க பெண் வாக்காளர்களிடமும், குடியரசு கட்சியினரிடமும் டிரம்ப் செல்வாக்கு அதிரடியாக சரிந்தது. இந்த நிலையில் மீண்டும் அதாவது 11-வது பெண் செக்ஸ் புகார் கூறியுள்ளார்.

    அவரது பெயர் ஜெசிகா டிரேக் (42). இவர் நிர்வாண சினிமா நடிகை ஆகவும், ‘செக்ஸ்’ கல்வி கற்று தருபவராகவும் இருக்கிறார். இவர் வக்கீல் குளோரியா ஆல்ரெட்டுடன் வந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு லேக் தாகோ பகுதியில் நடந்த கோல்ப் விளையாட்டு போட்டி நடந்த இடத்துக்கு சென்று இருந்தேன். அங்கு தற்போது குடியரசு கட்சி வேட்பாளராக இருக்கும் டொனால்டு டிரம்பை சந்தித்தேன்.

    அப்போது அவர் அனுமதியின்றி என்னிடம் அத்துமீறி நடந்து கொண்டார். மேலும் 2 பெண்களை அவர்கள் எதிர்பாராத நேரத்தில் முத்தமிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அதன் பின் ஓட்டல் அறைக்கு சென்ற எனக்கு அவரது உதவியாளர் ஒருவரிடம் இருந்து போன் வந்தது.

    அவரது (டிரம்பின்) விமானத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும், அவர் அளிக்கும் விருந்தில் கலந்து கொண்டு அவருடன் இரவில் அறையில் தங்க 10 ஆயிரம் அமெரிக்க டாலர் (ரூ.6 லட்சத்து 7 ஆயிரம்) தருவதாகவும் தெரிவித்தார். அதற்கு நான் சம்மதிக்கவில்லை” என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

    மேலும் டொனால்டு டிரம்புடன் எடுத்த போட்டோவையும் அவர் வெளியிட்டார். ஆனால் இக்குற்றச்சாட்டை டிரம்பின் பிரசார குழு மறுத்துள்ளது.

    இந்த கட்டுக்கதை முற்றிலும் பொய் மற்றும் கொடூரமானது. ஜெசிகா வெளியிட்டுள்ள போட்டோவானது டிரம்ப் ஆயிரக் கணக்கானவர்களுடன் எடுத்துக் கொண்டவைகளுள் ஒன்று. டிரம்ப்புக்கு இவரை யாரென்றே தெரியாது. இவரை தனக்கு நினைவில்லை என டிரம்ப் கூறுகிறார்.

    மேலும் அவரைப் பற்றி தான் அறிந்து கொள்ள பெரிய அளவில் விருப்பம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். தனது எதிரி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன் டிரம்பின் செல்வாக்கை குறைக்க எடுத்த மற்றொரு முயற்சியாகவே இதை கருதுகிறோம் என தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×