search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: கருத்துக்கணிப்பில் ஹிலாரி தொடர்ந்து முன்னிலை
    X

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: கருத்துக்கணிப்பில் ஹிலாரி தொடர்ந்து முன்னிலை

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்புகளில் தொடர்ந்து ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் முன்னிலை வகித்தாலும், மக்களிடையே டிரம்பின் செல்வாக்கும் சற்று அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது.
    நியூயார்க்:

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம், நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது. தொடர்ந்து தேர்தல் கருத்துக்கணிப்புகள் நடத்தி முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

    குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மீது தொடர்ந்து பல பெண்கள் செக்ஸ் புகார்களை கூறியதை தொடர்ந்து அவருக்கு கட்சியில் செல்வாக்கு குறைந்துள்ளது. பல தலைவர்கள் அவருக்கு எதிராக திரும்பி உள்ளனர்.

    கருத்துக்கணிப்புகளில் தொடர்ந்து ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் முன்னிலை வகித்தாலும், மக்களிடையே டிரம்பின் செல்வாக்கும் சற்று அதிகரித்து இருப்பது சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

    கடந்த 14–ந் தேதி தொடங்கி 20–ந் தேதி வரை ‘ராயிட்டர்ஸ்–இப்சோஸ்’ நடத்திய கருத்துக்கணிப்பில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு 44 சதவீதம் பேரின் ஆதரவு இருப்பது தெரிய வந்தது. ஆனால் டிரம்பை 40 சதவீதம் பேர் ஆதரிக்கின்றனர். இருவரிடையேயான வித்தியாசம் 4 சதவீதம்தான்.

    கடந்த 7–ந் தேதி முதல் 13–ந்தேதி வரை நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் ஹிலாரியை 44 சதவீதம் பேரும், டிரம்பை 37 சதவீதம் பேரும் ஆதரித்தனர். இருவருக்கு இடையே 7 சதவீதம் வித்தியாசம் நிலவியது.

    இப்போது அந்த 7 சதவீத ஆதரவு வித்தியாசம், 4 சதவீதமாக குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×