search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் கலைஞர்களுக்கு இந்தியாவில் தடைவிதிக்க வேண்டும்: சுப்ரமணியன் சுவாமி
    X

    பாகிஸ்தான் கலைஞர்களுக்கு இந்தியாவில் தடைவிதிக்க வேண்டும்: சுப்ரமணியன் சுவாமி

    பாகிஸ்தான் மக்களை இங்கு பணியாற்ற அனுமதிப்பதன் மூலம் இந்திய மக்களின் கோபத்தை தணித்துவிட முடியாது என்று சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
    நியூயார்க்:

    இந்தியா - பாகிஸ்தான் இடையே  பதட்டம் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் கலைஞர்கள் இந்தியாவில் பணியாற்ற தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்த நிலையில், இந்த கோரிக்கைக்கு  பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமியும் ஆதரவு தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மக்களை இங்கு பணியாற்ற அனுமதிப்பதன் மூலம் இந்திய மக்களின் கோபத்தை தணித்துவிட முடியாது என்று சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

    அமெரிக்கா சென்றுள்ள சுப்ரமணியன் சுவாமி நியூயார்க்கில் அங்குள்ள மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் துணைக்கண்டத்தின் விவகாரம் என்ற தலைப்பில் பேசிய சுப்ரமணியன் சுவாமி கூறியதாவது:- “ வரும் காலத்தில் போர் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதால் இன்று நமது நாட்டின் எண்ணத்தை அதற்குறிய வகையில் உருவாக்கும் இடத்தில் நாம் உள்ளோம். ஏற்கனவே நான்கு முறை பாகிஸ்தானுடன் நாம் போர் புரிந்துள்ளோம். எனவே இது வழக்கத்திற்கு மாறான நிகழ்வு அல்ல.

    மக்களின் மன நிலையை தயார் செய்யும் போது,  பாகிஸ்தான் சினிமா கலைஞர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் இங்கு வந்து விளையாடுவதை நாம் அனுமதிக்க முடியாது. பாகிஸ்தானில் இயல்பு நிலை திரும்பும் போது, சினிமா மற்றும் கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் துவங்கும் முதல் ஆளாக நாம் தான் இருப்போம். போர் என்பது எந்த ஒரு விஷயத்திற்கும் தீர்வாகாது. இருப்பினும் நரேந்திர மோடி அரசு பயங்கரவாதத்தை ஒரு போதும் சகித்துக்கொள்ளாது. எனவே பயங்கரவாதம் வந்தால் நம்மிடம் உள்ள பலத்தை கொண்டு தக்க பதிலடி கொடுப்போம்” என்றார்.
    Next Story
    ×