search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானிடம் இருந்து 10 சூப்பர் முஷாக் விமானங்களை வாங்குகிறது நைஜீரியா
    X

    பாகிஸ்தானிடம் இருந்து 10 சூப்பர் முஷாக் விமானங்களை வாங்குகிறது நைஜீரியா

    நைஜீரியா அரசு தனது வான்வழி சக்தியை வலுவாக்கும் வகையில் பாகிஸ்தானிடம் இருந்து 10 சூப்பர் முஷாக் விமானங்களை வாங்க உள்ளது.
    இஸ்லாமாபாத்:

    ஸ்வீடன் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு பாகிஸ்தானில் தயாரிக்கப்படும் அதிநவீன பயிற்சி விமானம் சூப்பர் முஷாக். இந்த விமானங்கள் சவுதி அரேபியா, ஓமன், ஈரான் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் பயன்பாட்டில் உள்ளது. கத்தார் மற்றும் துருக்கி நாடுகளுக்கும் டெலிவரி செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

    இந்நிலையில், நைஜீரியா இத்தகைய 10 சூப்பர் முஷாக் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. நைஜீரிய விமானப்படை துணை தளபதி அகமது அப்துல்லாஹி மற்றும் விமான தயாரிப்பு நிறுவனமான பாகிஸ்தான் ஏரோனாட்டிக்கல் காம்ப்ளக்ஸ் சேர்மன் அர்ஷத் மாலிக் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதாக பாகிஸ்தான் விமானப்படை தெரிவித்துள்ளது.

    நைஜீரிய விமானப்படைக்கு செயல்பாட்டு பயிற்சி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு மற்றும் உதவி செய்வதும் இந்த ஒப்பந்தத்தில் உள்ளது.

    இதுபற்றி பாகிஸ்தான் விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நைஜீரியாவுடன் போடப்பட்ட ஒப்பந்தமானது, வெளிநாடுகளுக்கு விமான போக்குவரத்து உபகரணங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான புதிய பகுதி மட்டுமல்லாமல் நாட்டிற்கும் வருவாய் கிடைக்கும். பாகிஸ்தான் ஏரோனாட்டிக்கல் காம்ப்ளக்ஸ் அந்தஸ்தும் மேலும் உயரும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×