search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவின் புகழ் பெற்ற அதிபராக ஹிலாரி திகழ்வார்: ஒபாமா புகழாரம்
    X

    அமெரிக்காவின் புகழ் பெற்ற அதிபராக ஹிலாரி திகழ்வார்: ஒபாமா புகழாரம்

    அமெரிக்காவின் புகழ்பெற்ற அதிபராக ஹிலாரி கிளிண்டன் திகழ்வார் என ஒபாமா புகழாரம் சூட்டினார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அதிபர் ஒபாமா புளோரியாவில் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது அவர் பேசுகையில், “அமெரிக்காவின் அடுத்த அதிபராகும் வாய்ப்பு ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு அதிக அளவு உள்ளது. அமெரிக்காவின் மிகப்பெரிய புகழ் பெற்ற அதிபராக அவர் திகழ்வார்.

    அவர் அமெரிக்காவின் முதல் பெண் ஆக (அதிபரின் மனைவியாக) இருந்துள்ளார். செனட்டராகவும், எனது வெளியுறவு துறை மந்திரியாகவும் பணிபுரிந்துள்ளார். மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் முக்கிய முடிவுகள் எடுப்பதில் எனக்கு உறுதுணையாக இருந்தார்.

    எத்தகைய முடிவுகள் ராணுவ வீரர்கள் மற்றும் மூத்த குடிமக்களை பாதிக்கும் என்பது அவருக்கு தெரியும். குழந்தைகளுக்கு எத்தகைய சிறந்த கல்வி தேவை என்பதும், சிறந்த வேலைக்கு போராடும் தொழிலாளர்கள் குறித்தும், ஓய்வூதியதாரர்களின் நிம்மதியான வாழ்க்கைக்குரிய தேவையும் அவருக்கு தெரியும்.


    அவர் ஒரு திறமைசாலி. பல பிரச்சனைகளை சிறந்த முறையில் சமாளிப்பார் என்பதை உங்களிடம் தெரிவித்து கொள்கிறேன். எதைப்பற்றி பேச வேண்டும் என அவருக்கு தெரியும். அவர் சிறந்த முறையில் பணியாற்றுவார்.

    பல நல்ல திட்டங்களை உருவாக்கி அமெரிக்காவை முன்னேற்றுவார். தற்போது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஹிலாரி கிளிண்டன் மட்டுமே சிறந்த அமெரிக்காவை உருவாக்க தனது வாழ்வை அர்ப்பணிக்கும் திறன் படைத்தவர்.

    ஏற்கனவே பணியில் (வெளியுறவு துறை அமைச்சர்) இருந்த அவருக்கு நிறைய அனுபவம் உள்ளது. இவரே அமெரிக்காவை வழி நடத்தும் அடுத்த தலைமை கமாண்டராக திகழ வேண்டும்.

    இவ்வாறு அதிபர் ஒபாமா பேசினார்.

    மியாமியில் தேர்தல் பிரசார கூட்டத்தில் அதிபர் ஒபாமா பேசினார். அப்போது, தான் தோல்வி அடைந்தால் தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என விவாதத்தின் போது கூறியுள்ளார். அது மிகவும் ஆபத்தானது என்றார்.
    Next Story
    ×