search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இஸ்லாமாபாத்தில் சார்க் மாநாடு நடைபெறுவதற்கான சூழல் இல்லை: இலங்கை கருத்து
    X

    இஸ்லாமாபாத்தில் சார்க் மாநாடு நடைபெறுவதற்கான சூழல் இல்லை: இலங்கை கருத்து

    இஸ்லாமாபாத்தில் சார்க் மாநாடு நடைபெறுவதற்கான சூழல் தற்போது இல்லை என்று இலங்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கொழும்பு:

    பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறுவதாக உள்ள சார்க் மாநாட்டை இந்தியா உள்ள 4 நாடுகள் ஏற்கனவே புறக்கணித்துள்ளன.

    இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் சார்க் மாநாடு நடைபெறுவதற்கான சூழல் தற்போது இல்லை என்று இலங்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்தமுள்ள 8 நாடுகளில் 5-வது நாடாக இலங்கை இந்த மாநாட்டைப் புறக்கணிக்க உள்ளதாக தெரிகிறது.

    இது தொடர்பாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளதாவது:-

    அனைத்து விதமான முடிவுகளும் ஒருமித்த உணர்வுடன் எடுக்கப்பட வேண்டும் என்று சார்க் சாசனத்தின் பொது விதிகள் வலியுறுத்துகிறது.

    சார்க் நாடுகளின் தலைவர்களை கூட்டுவதற்கும் இது பொருந்தும். அனைத்து வகையான தீவிரவாதத்தையும் இலங்கை கண்டிக்கிறது. சார்க் நாடுகளின் பகுதிகளில் நிலவி வரும் தீவிரவாதம் தொடர்பான பிரச்சனைகளை தீர்மானகரமான முறையில் எதிர்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு தெரிவித்துள்ளது.

    சார்க் எனப்படும் தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் 19-வது மாநாடு வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ளது. நவம்பர் 9, 10-ந்தேதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை பாகிஸ்தான் தீவிரமாக செய்து வருகிறது.

    காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்லாமாபாத்தில் நடைபெறும் சார்க் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டார் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

    இந்தியாவை தொடர்ந்து வங்கதேசம், பூடான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் புறக்கணிக்கப்பதாக தெரிவித்தது.
    Next Story
    ×