search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அடுத்த வாரம் நடைபெறுவது தான் அமெரிக்காவுடன் கடைசி கூட்டு போர்ப்பயிற்சி: பிலிப்பைன்ஸ் அதிபர் அறிவிப்பு
    X

    அடுத்த வாரம் நடைபெறுவது தான் அமெரிக்காவுடன் கடைசி கூட்டு போர்ப்பயிற்சி: பிலிப்பைன்ஸ் அதிபர் அறிவிப்பு

    பிலிப்பைன்ஸ்-அமெரிக்கா இடையே அடுத்த வாரம் நடைபெறுவது தான் கடைசி கூட்டு போர் பயிற்சி என பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ அறிவித்துள்ளார்.
    ஹனாய்:

    ஆசிய கண்டத்தில் பிலிப்பைன்ஸ் நாடானது அமெரிக்காவிற்கு நெருங்கிய கூட்டாளியாக இருந்து வருகிறது. பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்கா இடையே அடுத்த வாரத்தில் கூட்டு பாதுகாப்பு பயிற்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பிலிப்பைன்ஸ்-அமெரிக்கா இடையே அடுத்த வாரம் நடைபெறுவது தான் கடைசி கூட்டு போர் பயிற்சி என்று அதிபர் ரோட்ரிகோ திடீரென அறிவித்துள்ளார்.

    அமெரிக்கா உடனான நீண்ட கால கூட்டு பயிற்சி ஒப்பந்தத்தை கடைப்பிடிக்க விருப்பம் தான். ஆனால் இந்த கடல்வழி கூட்டு பயிற்சிக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    தென் சீனக் கடல் விவகாரத்தில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டின் இந்த முடிவு சீனாவுக்கு சாதகமாக அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.

    இருப்பினும், கூட்டுப் பயிற்சி தொடர்வதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்க செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியுள்ளார்.

    முன்னதாக பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை கடுமையாக திட்டிப் பேசி பரபரப்பை ஏற்படுத்தினர். பின்னர் அதற்காக மன்னிப்பு கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×