search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெருப்புடன் விளையாடாதீர்கள்: தென் சீனக் கடல் விவகாரத்தில் ஜப்பானுக்கு சீனா எச்சரிக்கை
    X

    நெருப்புடன் விளையாடாதீர்கள்: தென் சீனக் கடல் விவகாரத்தில் ஜப்பானுக்கு சீனா எச்சரிக்கை

    தென் சீனக் கடல் விவகாரத்தில், நெருப்புடன் விளையாட வேண்டாம் என ஜப்பானுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
    பீஜிங்:

    தென் சீனக் கடல் பகுதி தங்களுக்குத்தான் சொந்தம் என்று சீனா, வியட்நாம், தைவான் ஆகிய நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. மேலும் இப்பகுதியின் சில பகுதிகள் தங்களுக்கு சொந்தம் என்று ஜப்பான், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே ஆகிய நாடுகள் உரிமை கோரி வந்தன.

    இந்த நிலையில், தென் சீனக் கடல் பகுதி தொடர்பாக பிலிப்பைன்ஸ் அரசு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது. அந்த வழக்கின் முடிவில் தென் சீனக் கடல் பகுதியில் சீனாவிற்கு உரிமை இல்லை என்று சர்வ தேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    சர்வதேச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை ஏற்க மறுத்த சீனா தொடர்ந்து தென் சீனக் கடல் பகுதியில் உரிமை கொண்டாடி வருவதோடு கடல் பகுதியில் தனது ராணுவ நிலைகளை கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் இந்தக் கடல் பகுதி முழுவதையும் செயற்கைக் கோள் மூலம் கண்காணித்தும் வருகிறது.

    இந்நிலையில், தென் சீனக் கடல் விவகாரத்தில், நெருப்புடன் விளையாடாதீர்கள் என்று ஜப்பானுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

    தென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்காவுடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபடலாம் என்று ஜப்பான் அறிவித்ததை அடுத்து சீனா இவ்வாறு கூறியுள்ளது.

    ஜப்பானின் அறிவிப்பு தென் சீனக் கடல் பகுதியில் நிலவி வரும் சூழ்நிலையை குழப்பி, அதில் இருந்து பலனடைய நினைக்கும் செயல் என்று சீனா தெரிவித்துள்ளது.

    சீனாவும் முதன் முறையாக கடந்த திங்கட்கிழமை ஜப்பானுக்கு அருகில் உள்ள மேற்கு பசிபிக் பகுதியில் போர் விமானங்களை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×