search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தை குறைக்க தொடர்ந்து முயற்சி: சீனா
    X

    இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தை குறைக்க தொடர்ந்து முயற்சி: சீனா

    இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பதற்றமான சூழலை குறைக்க இருநாடுகளுடன் தொடர்ச்சியாக பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சீனா தெரிவித்துள்ளது.
    பீஜிங்:

    சர்வதேச எல்லையையொட்டி பாகிஸ்தான் பகுதியில் தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய வீரர்கள் நள்ளிரவில் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

    இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பதற்றமான சூழலை குறைக்க இருநாடுகளுடன் தொடர்ச்சியாக பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சீனா தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஜெங் ஷூவாங் கூறுகையில், “இந்தியாவும், பாகிஸ்தானும் தொடர்பு கொண்டு தங்களது வேறுபாடுகளை முறையாக சரி செய்து கொள்ள முடியும். தங்களது பகுதிகளில் அமைதி மற்றும்  பாதுகாப்பை நிலைநாட்ட கூட்டாக செயல்பட வேண்டும்.

    இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு சீனா நட்பு ரீதியான அண்டை நாடு. அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தான் மற்றும் இந்தியா உடன் சீனா தொடர்ச்சியாக பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது” என்றார்.
    Next Story
    ×