search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்கொரியாவின் அணுஆயுத திட்டத்துடன் தொடர்புடைய சீன நிறுவனத்துக்கு அமெரிக்கா பொருளாதார தடை
    X

    தென்கொரியாவின் அணுஆயுத திட்டத்துடன் தொடர்புடைய சீன நிறுவனத்துக்கு அமெரிக்கா பொருளாதார தடை

    பேரழிவை ஏற்படுத்தும் வகையில் தென்கொரியாவின் அணுஆயுத திட்டத்துக்கு தேவையான உபகரணங்களை சப்ளை செய்துவரும் சீன நிறுவனத்துக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.
    வாஷிங்டன்:

    கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது.

    அந்தநாடு தொடர்ந்து 3 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி, அதிரடியாக அணுகுண்டை விட பல மடங்கு சக்திமிக்க ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதித்தது. இதுவும் அணுகுண்டு வகையில்தான் கணக்கில் கொள்ளப்படுகிறது. அதன்படி வடகொரியா இதுவரை 4 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளதாக சர்வதேச நாடுகள் பதிவு செய்துள்ளன.

    இதன்காரணமாக, வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஆனாலும் அந்த நாடு, தற்காப்பு என்ற பெயரில் தொடர்ந்து அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளை விடாமல் நடத்தி வருகிறது.


    இந்நிலையில், பேரழிவை ஏற்படுத்தக்கூடிய தென்கொரியாவின் அணுஆயுத திட்டத்துக்கு தேவையான உபகரணங்களை சப்ளை செய்துவரும் சீன நிறுவனத்துக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

    சீனாவை சேர்ந்த டாண்டாங் ஹாங்சியாங் என்ற நிறுவனம் அமெரிக்காவால் பொருளாதார தடை விதிக்கப்பட்ட வடகொரியா வங்கியின் மூலம் அந்நாட்டின் அணுஆயுத திட்டத்துக்கு தேவையான உபகரணங்களை சப்ளை செய்துவருவதாக குற்றம்சாட்டியுள்ள அமெரிக்க கருவூலத்துறை செயலகம்,  டான்டாங் ஹாங்சியாங் என்ற சீன நிறுவனத்துக்கு எதிராக பொருளாதார தடை விதித்துள்ளது.

    சர்வதேச அளவில் கள்ளத்தனமான கருப்புப்பண பரிமாற்றத்தில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டி, அந்நிறுவனத்தின் அதிபர் மா சியாவ்ஹாங் உள்ளிட்ட நான்கு உயரதிகாரிகள் மீதும் பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×