search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர் விவகாரம்: ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் எழுப்பக்கோரும் மனு - லாகூர் ஐகோர்ட்டில் தள்ளுபடி
    X

    காஷ்மீர் விவகாரம்: ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் எழுப்பக்கோரும் மனு - லாகூர் ஐகோர்ட்டில் தள்ளுபடி

    காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் எழுப்புவதற்கு பாகிஸ்தான் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்ட மனுவை லாகூர் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது
    லாகூர்:

    மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்டவரும், ஜமாத்-உத்-தவா அமைப்பின் தலைவருமான ஹபீஸ் சயீத், பாகிஸ்தானில் உள்ள லாகூர் ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், இந்திய ராணுவம் காஷ்மீரில் தாக்குதல் நடத்தி ஏராளமானோரை கொல்வதாகவும், எனவே காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் எழுப்புவதற்கு பாகிஸ்தான் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சயீத் மன்சூர் அலி, இது அரசியல் விவகாரம் என்றும், இதில் கோர்ட்டு தலையிட முடியாது என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

    ஹபீஸ் சயீத்தின் தலைக்கு 10 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.66 கோடி) சன்மானம் அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×