search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணுவ கண்காட்சியில் போர்க் கருவிகள்: விடுதலை புலிகள் தொழில் நுட்பத்திறனை கண்டு வியக்கும் சிங்கள மக்கள்
    X

    ராணுவ கண்காட்சியில் போர்க் கருவிகள்: விடுதலை புலிகள் தொழில் நுட்பத்திறனை கண்டு வியக்கும் சிங்கள மக்கள்

    ராணுவ கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள போர்க் கருவிகளில் விடுதலைப்புலிகளின் தொழில் நுட்பத்தை கண்டு சிங்கள மக்கள் வியப்படைந்துள்ளனர்.
    கொழும்பு:

    இலங்கையில் கடந்த 2008-ம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே இறுதிகட்ட போர் நடந்தது. அப்போது விடுதலைப் புலிகளிடம் இருந்து போர் தளவாட கருவிகள் கைப்பற்றப்பட்டன.

    இந்த நிலையில் முல்லைத் தீவு மந்துவில் ராணுவ கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. அதில் இலங்கை ராணுவத்தில் பயன்படுத்தப்படும் கருவிகளும், விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போர் தளவாடங்களும் இடம் பெற்றுள்ளன.

    இவற்றில் பெரும்பாலானவை விடுதலைப்புலிகள் முயற்சியால் தயாரிக்கப்பட்டவையே ஆகும். இக்கண்காட்சியை காண அதிக அளவில் சிங்கள மக்கள் வருகின்றனர். இவர்கள் போரின்போது விடுதலைப்புலிகள் பயன்படுத்திய போர்க் கருவிகளை பார்த்து வியப்படைகின்றனர்.

    மேலும் பெருமிதத்தோடு விடுதலைப்புலிகளின் தொழில் நுட்பத்திறன் பற்றி தங்களுக்குள் பேசிக் கொள்கின்றனர். இக்காட்சியில் விடுதலைப்புலிகள் பயன்படுத்திய 2 ஆயிரம் ஏவுகணைகள், அவற்றை செலுத்தும் கருவிகள் உள்ளிட்டவை விசே‌ஷமானவை.
    Next Story
    ×