search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெக்சிகோவில் கடத்தப்பட்ட பாதிரியார்கள் பிணமாக கண்டெடுப்பு
    X

    மெக்சிகோவில் கடத்தப்பட்ட பாதிரியார்கள் பிணமாக கண்டெடுப்பு

    மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் வியாபாரிகளால் கடத்தப்பட்ட இரு பாதிரியார்கள் சாலையோரம் பிரேதங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
    மெக்சிகோ சிட்டி:

    ஹெராயின், கஞ்சா, அபின், பிரவுன் ஷுகர் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் உற்பத்தியில் உலகின் முக்கிய நாடாக மெக்சிகோ விளங்கி வருகிறது. இங்குள்ள போதைப்பொருள் மாபியாக்கள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற தாக்குதல்களால் ஒருவரை மற்றவர் பழிதீர்த்து வருகின்றனர்.

    இதுதவிர, அபினி செடிகளை வளர்ப்பதிலும், வெளிநாட்டு தரகர்களுக்கு பொருட்களை விற்பனை செய்வதிலும் இங்குள்ள மாபியாக்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையில், கடத்தல் பேர்வழிகளின் நடமாட்டம் நிறைந்த பகுதிகளில் சமீபகாலமாக மர்மப் பிணங்கள் வரிசையாக கண்டெடுக்கப்படுகின்றன.

    இந்நிலையில், மெக்சிகோவில் உள்ள வெராகுருஸ் மாநிலத்தில் உள்ள போஸா ரிக்கா ஒரு கிறிஸ்தவ தேவாலயத்துக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நுழைந்த சிலர் அங்கிருந்த இரு பாதிரியார்களை கடத்திச் சென்றனர். அவர்களை மீட்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில், அப்பகுதியில் உள்ள போஸாரிக்கா - பாப்ன்ட்லா நெடுஞ்சாலையில் கடத்தப்பட்ட பாதிரியார்களான அலேஜோ ஜிமெனெஸ், ஜோஸ் ஜுவாரெஸ் ஆகியோர் நேற்று பிரேதங்களாக கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×